என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு வருகிறது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடங்கக்கூடிய OLED சினிமா விஷன் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என மோட்டோரோலா அழைக்கிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    அமெரிக்காவில் இதன் விலை 1,499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,230) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜனவரி 26-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி துவங்க இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், இசிம் வசதி, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.20.13 பதிப்பில் டார்க் மோட் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. கடந்த பல மாதங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், டார்க் மோட் அம்சத்திற்கான சோதனை ஒருவழியாக துவங்கி இருக்கிறது. 

    சில செயலிகளில் இருப்பதை போன்று முழுமையான கருப்பு நிறத்திற்கு மாற்றாக வாட்ஸ்அப் டார்க் மோட் நிறம் சற்றே டார்க் கிரே போன்று காட்சியளிக்கிறது. சாட் பாக்ஸ் டார்க் பேக்கிரவுண்டில், குறுந்தகவல்கள் பச்சை நிற பின்னணியில் தெரிகிறது.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் செயலியில் டார்க் தீம் ஆக்டிவேட் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்

    பின் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் -- தீம் -- டார்க் தீம் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்

    ஆண்ட்ராய்டு 10 பயனர்களுக்கு சிஸ்டம் டீஃபால்ட் ஆப்ஷன் ஆண்ட்ராய்டு சிஸ்டம் பயன்படுத்தும் தீமினை கண்டறிந்து அதனை மாற்றம் செய்கிறது

    ஆண்ட்ராய்டு பை மற்றும் பழைய வெர்ஷன் பயன்படுத்துவோர் செட் பை டேட்டா சேவர் ஆப்ஷன் மூலம் லைட் அல்லது டார்க் தீம் பயன்படுத்தலாம். இது பேட்டரி சேவர் செட்டிங்கிற்கு ஏற்ப தானாக மாறும்

    வாட்ஸ்அப் டார்க் தீம் அம்சம் செயலியின் ஸ்டேபில் பதிப்பை பயன்படுத்துவோருக்கு விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு தளத்தை தொடர்ந்து ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி 500 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது.



    ஆண்ட்ராய்டு இங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் இத்தனை கோடி டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லாத இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. 

    இந்த டவுன்லோடு எண்ணிக்கை பிளே ஸ்டோர் மட்டுமின்றி சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சாதனங்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட பதிப்புகளையும் சேர்த்தது ஆகும். முன்னதாக இத்தனை டவுன்லோடுகளை கடந்த முதல் செயலி என்ற பெருமையை ஃபேஸ்புக் பெற்றது.

    உலகம் முழுக்க பிரபல செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை தற்சமயம் 160 கோடியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடியாகவும், வீசாட் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 110 கோடியாக இருக்கிறது.

    வாட்ஸ்அப்

    முன்னதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியது.

    கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்து இருந்தது.
    இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் 2019 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.40 சதவீதம் குறைவாகும். தொலைபேசி இணைப்புகள் பற்றி இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரங்களை பார்ப்போம்.

    நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.38 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாதமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து நவம்பர் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது இது 2.40 சதவீதம் சரிவாகும்.

    நவம்பர் மாதத்தில், நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 66.60 கோடியாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அது 68.17 கோடியாக இருந்தது. கிராமங்களில் இந்த இணைப்புகள் (52.32 கோடியில் இருந்து) 50.99 கோடியாக குறைந்து இருக்கிறது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 115.44 கோடியாக உள்ளது.

    டிராய்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். 3.41 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கின்றது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

    நவம்பர் மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 2.67 சதவீதம் வளர்ச்சி கண்டு 66.13 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 64.41 கோடியாக இருந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 37.07 கோடி இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது. 

    அடுத்து பாரதி ஏர்டெல் (13.99 கோடி), வோடாபோன் (11.99 கோடி), பி.எஸ்.என்.எல். (2.25 கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன. அகன்ற அலைவரிசை இணைப்புகளின் அடிப்படையில் முன்னணி 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தைப்பங்கு 98.99 சதவீதமாக இருக்கிறது.
    சியோமியின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராப் அரவுண்ட் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை CNY 19,999 (இந்திய மதிப்பில் ரூ. 2,00,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இதே ஸ்மார்ட்போன் இந்திய ஊடக சந்திப்பு ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    சியோமி Mi மிக்ஸ் ஆல்ஃபா

    இவை இதன் இந்திய வெளியீட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீசருடன் Mi மிக்ஸ் ஆல்ஃபாவின் சிறு வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைபக்கம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

    Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இந்த சென்சாரை சாம்சங் நிறுவனத்துடன் சியோமியும் இணைந்து உருவாக்கி இருக்கிறது. இதில் செல்ஃபி கேமரா வழங்கப்படவில்லை. எனினும், இதன் பிரைமரி கேமராவை கொண்டே செல்ஃபி எடுக்க முடியும்.

    இத்துடன் 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 40 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் சீரிஸ் 12 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடல்களை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டிற்கு இன்னும் ஒருவருட காலம் இருந்தாலும், இதுபற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கிவிட்டன.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை நான்கு வேரியண்ட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 மேக்ஸ் ப்ரோ மற்றும் ஐபோன் எஸ்.இ. 2 உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மாடல்களில் 12 இன்ச் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இவற்றில் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    ஐபோன் 11 சீரிஸ்

    டிஸ்ப்ளே பேனல் தவிர 6.7 இன்ச் ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா, 3D சென்சிங் மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம். 6.1 இன்ச் ஐபோனின் முதல் மாடலில் மூன்று கேமராக்கள், 3D சென்சிங் மற்றும் 6 ஜி.பி. ரேமும் மற்றொரு 6.1 இன்ச் ஐபோனில் இரண்டு பிரைமரி கேமரா, 4 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது.  

    முன்னதாக வெளியான தகவல்களில் எதிர்கால ஐபோன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இத்துடன் லைட்னிங் கேபிளுக்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இந்தியாவில் அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி நோட் 10 லைட் விற்பனை பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    புதிய நோட் லைட் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 39,900 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 10 லைட்

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் அதிநவீன கேமரா, எஸ் பென், பெரிய டிஸ்ப்ளே, நீண்ட நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் எஸ் பென் ப்ளூடூத் லை எனர்ஜி வசதி மற்றும் ஏர் கமாண்ட் வசதி வழங்கப்படலாம்.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களுக்கென சிறப்பு பக்கம் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியது.
    டிக்டாக் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் புதிய செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் லஸ்ஸோ செயலியை இந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் லஸ்ஸோ சேவையை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது, டிக்டாக் செயலி லஸ்ஸோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள ஃபேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    லஸ்ஸோ செயலி

    டிக்டாக்கிற்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதுவரை பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர்.

    லஸ்ஸோ செயலியை இந்தியா தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் டீசர்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 48 எம்.பி. பிரைமரி கேமரா, சூப்பர் ஸ்டெடி OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ப்ரிசம் வைட், ப்ரிசம் பிளாக் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
    இந்தியா முழுக்க இணைய சேவை முடக்கங்களால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.



    காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    இணையதள சேவைகள் முடக்கப்பட்டதால் இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதை ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் இணையதள ரத்ததால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறது.

    இணைய சேவை

    அந்த வகையில் கடந்த ஆண்டு ஈராக், சூடான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில்தான் இணையதள முடக்கத்தால் அதிக பொருளதார பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் காஷ்மீர், உத்தரபிரதேசம், அருணாசலபிரதேசம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு 4,196 மணி நேரத்திற்கு இந்தியா முழுவதும் இணையதள சேவைகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இது பொருளாதார வளர்ச்சியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்வேறு துறைகளிலும் ரூ.9,247 கோடிக்கு இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஐரோப்பிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆண்டும் சில மாநிலங்களில் இணையதள முடக்கம் தொடர்வதால் பொருளாதார ரீதியிலான இழப்பு அதிகரித்தபடி உள்ளது.
    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவையினை இனிமேல் இப்படியும் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    ஏர்டெல் நிறுவனம் தனது வைபை காலிங் சேவையினை கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லியிலும் அதன்பின் தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மும்பை, கொல்கத்தா போன்ற பகுதிகளில் நீட்டிக்கப்பட்டது. 

    இந்நிலையில், ஏர்டெல் வைபை காலிங் சேவை தற்சமயம் கேரளா, குஜராத், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சேவையினை ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஹோம் பிராட்பேண்ட் சேவையில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது.

    அந்த வகையில் தற்சமயம் ஏர்டெல் வைபை காலிங் சேவையினை வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க்கில் இணைந்திருந்தாலும் பயன்படுத்த முடியும். புதிய மாற்றம் பற்றிய அறிவிப்பு இதுவரை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்படவில்லை. இவற்றுடன் ஏர்டெல் வைபை காலிங் சேவையை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் எண்ணிக்கையையும் ஏர்டெல் அதிகரித்துள்ளது.

    ஏர்டெல் வைபை காலிங் சேவையை இயக்க எந்த செயலியும் தேவைப்படாது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் செட்டிங்கை மட்டும் மாற்றியமைத்தால் போதுமானது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

    ஏர்டெல் வைபை காலிங்

    முதலில் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திற்கு வைபை காலிங் சேவை வழங்கப்படுகிறதா என்பதை airtel.in/wifi-calling இணைய முகவரியில் சரிபார்க்க வேண்டும்

    பின் ஸ்மார்ட்போனின் இயங்குதளத்தை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்

    இனி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் சென்று வைபை காலிங் வசதியை செயல்படுத்த வேண்டும்

    சீரான அனுபவத்திற்கு வோல்ட்இ சேவையை ஆன் செய்திருப்பது அவசியமாகும்

    ஏர்டெல் வைபை காலிங் வேலை செய்யும் சாதனங்கள்:

    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை தற்சமயம் ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் , ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ

    ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ் 6டி, ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 7டி ப்ரோ

    போகோ எஃப்1, ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ, ரெட்மி 7ஏ, ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி வை3, ரெட்மி 7

    சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எம்20, கேலக்ஸி ஜெ6, கேலக்ஸி ஆன் 6, கேலக்ஸி எம்30எஸ், கேலக்ஸி ஏ10எஸ், கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி நோட் 9 போன்ற மாடல்களில் மட்டும் வேலை செய்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோவின் வோ வைபை சேவை சென்னை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் சேவை சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் துவங்கப்பட்டது. ஏர்டெல் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைபை காலிங் சேவையை சென்னை மற்றும் டெல்லி பகுதிகளில் துவங்கியுள்ளது. முன்னதாக டெல்லியில் இந்த சேவை சோதனை நடைபெற்றது.

    சென்னையில் பல்வேறு வாடிக்கையாளர்கள் வைபை காலிங் ஐகானை தங்களது ஸ்மார்ட்போன்களில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். ஏர்டெல் போன்று இல்லாமல் ஜியோ நெட்வொர்க்கில் வைபை காலிங் சேவையினை எந்த வைபையுடன் இணைந்திருந்தாலும் பயன்படுத்த முடியும்.

    வைபை காலிங்

    ஏர்டெல் நெட்வொர்க்கில் வைபை காலிங் சேவை தற்சமயம், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையில் இணைந்திருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் மொபைல் ஹாட்ஸ்பாட் சேவையிலும் ஜியோ வோவைபை சேவை சீராக இயங்குவதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ×