search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி Mi மிக்ஸ் ஆல்ஃபா
    X
    சியோமி Mi மிக்ஸ் ஆல்ஃபா

    விரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமியின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராப் அரவுண்ட் டிஸ்ப்ளே கொண்ட Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை CNY 19,999 (இந்திய மதிப்பில் ரூ. 2,00,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இதே ஸ்மார்ட்போன் இந்திய ஊடக சந்திப்பு ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    சியோமி Mi மிக்ஸ் ஆல்ஃபா

    இவை இதன் இந்திய வெளியீட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டீசருடன் Mi மிக்ஸ் ஆல்ஃபாவின் சிறு வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைபக்கம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

    Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இந்த சென்சாரை சாம்சங் நிறுவனத்துடன் சியோமியும் இணைந்து உருவாக்கி இருக்கிறது. இதில் செல்ஃபி கேமரா வழங்கப்படவில்லை. எனினும், இதன் பிரைமரி கேமராவை கொண்டே செல்ஃபி எடுக்க முடியும்.

    இத்துடன் 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 40 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×