search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு தளத்தில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்த வாட்ஸ்அப்

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி 500 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது.



    ஆண்ட்ராய்டு இங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை சுமார் 500 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். பிளே ஸ்டோரில் இத்தனை கோடி டவுன்லோடுகளை கடந்த கூகுள் அல்லாத இரண்டாவது செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. 

    இந்த டவுன்லோடு எண்ணிக்கை பிளே ஸ்டோர் மட்டுமின்றி சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சாதனங்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட பதிப்புகளையும் சேர்த்தது ஆகும். முன்னதாக இத்தனை டவுன்லோடுகளை கடந்த முதல் செயலி என்ற பெருமையை ஃபேஸ்புக் பெற்றது.

    உலகம் முழுக்க பிரபல செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை தற்சமயம் 160 கோடியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடியாகவும், வீசாட் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 110 கோடியாக இருக்கிறது.

    வாட்ஸ்அப்

    முன்னதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியது.

    கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்து இருந்தது.
    Next Story
    ×