search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி?

    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயிலிக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.20.30.25 பீட்டா வெர்ஷனில் டார்க் தீம் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனை தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கும் டார்க் தீம் வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா செயலியில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுகிறது. எனினும், பீட்டா பதிப்பில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    வாட்ஸ்அப் வெப் டார்க் தீம்

    வாட்ஸ்அப் வெப் சாட்பாக்ஸ், ஜிஃப் பேனல் என முழுமையாக டார்க் மோட் செயல்படுத்தப்பட்டு இருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புதிய அம்சத்திற்கான சோதனை நிறைவுற்றதும் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளங்களில் டார்க் மோட் வழங்கப்படுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு வழங்குவதற்கான பணிகளை வாட்ஸ்அப் துவங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×