search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு விசாரணை"

    • 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ராஜாவை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்த கோட்டார் பகுதியில் அப்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தேர்தல் விதிமுறை அமலில் இருந்த நிலையில் நிர்வாகிகள் திரண்டதால் எஸ்.ஏ.அசோகன் உட்பட 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.ஏ.அசோகன் மற்றும் கிருஷ்ணதாஸ், ஆர்.ஜே.கே. திலக், ஜெயசீலன், டாரதி சாம்சன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த விவகாரத்தில் கைதாகியுள்ள நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #NirmalaDevi
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கவர்னர் அமைத்த விசாரணை அதிகாரி சந்தானம் தனது விசாரணை அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஜிஎஸ் மணியன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியாத போதே, அது சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். 
    ×