search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை
    X

    ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை

    ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. #DelhiHC #ADMK
    புதுடெல்லி:

    அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.



    ஆனால், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. #DelhiHC #ADMK
    Next Story
    ×