என் மலர்
செய்திகள்

வழக்கு விசாரணை நீடிப்பதால் வேதனை - கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்த ஆட்டோ டிரைவர்
கோவையில் வழக்கு விசாரணை நீடிப்பதால் வேதனை அடைந்த ஆட்டோ டிரைவர் கோர்ட்டு வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (44). ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பாண்டுரங்கன் மனைவி விவாகரத்து கேட்டு கோவை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இதனால் பாண்டு ரங்கன் மன வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று கோவையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் ஆஜராக பாண்டு ரங்கன் வந்தார். திடீரென அவர் கோர்ட்டு வளாகத்தில் தான் கொண்டு வந்த சாணிப்பவுடரை குடித்து விட்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாண்டு ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோர்ட்டு வளாகத்தில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Next Story