search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் உயிரிழப்பு"

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்
    • அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள புத்தரச்சல் காலனியை சேர்ந்த வஜ்ரவடிவேல் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் புத்தெரிச்சலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க ஓடிவந்த போது, அந்த வழியில் இருந்த ஒரு கிணற்றில் தவறி உள்ளே விழுந்து விட்டான். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே இறங்கி கயிறு மூலம் மாணவனின் உடலை மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
    • கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.

    இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். பல இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நிஹால் நிஷாத், அப்பகுதியில் உள்ள சாலையோரம் படுகாயங்களுடன் மயங்கி கிடப்பதை ஊர் மக்கள் பார்த்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவனை தெருநாய் கடித்து குதறி இருப்பதாக தெரிவித்தனர். இதில் கழுத்து, இதயம், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்த நிஹால் நிஷாத்தின் உறவினர்கள், சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு மகன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பின்னரே சிறுவனின் உடல் அடக்கம் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    கண்ணூர் சிறுவன் நிஹால் நிஷாத் தெருநாய் கடித்து இறந்தது குறித்து குழந்தைகள் நல கமிஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இச்சம்பவம் குறித்து மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

    தெருநாய்கள் கடித்து நிஹால் நிஷாத் பலியான பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல 2 குழந்தைகளை தெருநாய்கள் கடித்த சம்பவம் நடந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 2 குழந்தைகளும் படுகாயங்களுடன் தப்பிவிட்டன. இப்போது நிஹால் நிஷாத் நாய் கடித்து இறந்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் சுமார் 3 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 32 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதனால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விலங்குகள் நல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டும் போதாது அவற்றின் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கோட்டீஸ்வர ராவ் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கோட்டீஸ்வர ராவ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டம், குட்டி கொண்டா பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ், சுகுணா தம்பதியினரின் மகன் கோட்டீஸ்வரலு (வயது 16).

    இவர் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் படித்து கொண்டிருந்த கோடீஸ்வர ராவுக்கு திடீரென மூச்சு திணறல், உடல் வியர்த்து கொட்டியது.

    அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மாணவனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சு வலியால் மாணவன் இறந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அலறி அடித்துக்கொண்டு வந்து மகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
    • கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் என்கிற ராஜா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகன் மதன்குமார். அரசு பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.

    ராஜா மதுபோதைக்கு அடிமையானவர். இதனால் அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மகாலட்சுமி பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும் வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனம் திருந்திய மகாலட்சுமி மீண்டும் கணவர் ராஜாவுடன் சேர்ந்து வாழ திரும்பி வந்தார். காதலி மகாலட்சுமி பிரிந்து சென்றதால் கோபம் அடைந்த கார்த்திக், கடந்த 7-ந்தேதி, விருகம்பாக்கத்தில் உள்ள மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை மகாலட்சுமியின் மகன் மதன்குமார் கண்டித்தார்.

    இதனால் கார்த்திக்-மதன்குமார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மதன் குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதன்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.
    • சாப்பிட்டு விட்டு தூங்கிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன்.

    இவன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்க மின்மையால் அவதிப்பட்டு வந்தான்.

    நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

    • அஜய்குமார் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருக்கு செல்வக்குமாரி என்ற மனைவியும், அஜய்குமார்(வயது 10) உள்பட 2 மகன்களும் உள்ளனர்.

    அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர்.

    அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே விழுந்தார். இதில் அவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவனை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்த்த சிறிது நேரத்திலேயே அஜய்குமார் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாட்டின் போது இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    • தாக்கப்பட்ட நிலையில் பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சக்கில் நத்தம் கப்பல்வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னம் பாளையால் மாணவன் கோபிநாத்தை உடன் படிக்கும் மாணவன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்தார். மேலும் மாணவன் கோபிநாத்திற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார். இதனை அறிந்த அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, வழியிலேயே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவன் கோபிநாத்தை தாக்கிய மற்றொரு மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவனும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர்.
    • போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையில் போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

    திருத்தணி:

    திருத்தணி, ஏரிக்கரை தெருவில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களின் உதவியோடு கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டது, அரக்கோணம் அருகே உள்ள தணிகை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருடை மகன் சூரியபிரகாஷ் (வயது 17) என்பது தெரிந்தது.

    அவர், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.

    பள்ளி முடிந்ததும் அவர் உடன் படிக்கும் திருத்தணி பகுதியை சேர்ந்த சக மாணவர்களுடன் ஏரிக்கரை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. அப்போது சூரியபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

    மாணவன் சூரிய பிரகாசின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×