நெஞ்சுவலியால் பள்ளி மாணவன் உயிரிழப்பு

கோட்டீஸ்வர ராவ் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.கோட்டீஸ்வர ராவ் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
நெஞ்சுவலியால் பள்ளி மாணவன் உயிரிழப்பு
Published on

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், பல்நாடு மாவட்டம், குட்டி கொண்டா பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ், சுகுணா தம்பதியினரின் மகன் கோட்டீஸ்வரலு (வயது 16).

இவர் பிடுகு ரல்லாவில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விடுதியில் படித்து கொண்டிருந்த கோடீஸ்வர ராவுக்கு திடீரென மூச்சு திணறல், உடல் வியர்த்து கொட்டியது.

அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். மாணவனை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நெஞ்சு வலியால் மாணவன் இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அலறி அடித்துக்கொண்டு வந்து மகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com