search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஸ்கட்"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார்.
    • தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார்.

    ராஞ்சி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'பாரத ஒற்றுமை நீதி' யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

    ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார். அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.

    ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மற்றொரு பா.ஜனதா தலைவர் சி.டி. பல்லவி கூறும்போது, "தற்போது அசாம் முதல்-மந்திரியாக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ராகுல்காந்தி அவமரியாதை செய்து தனது நாய் சாப்பிடும் அதே தட்டில் பிஸ்கட் சாப்பிட வற்புறுத்தினார்" என்றார்.

    அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் பதில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தாராலும் அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க அசாமியன் மற்றும் இந்தியன் ஆவேன். நான் சாப்பிட மறுத்தேன். காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    கட்சி தொண்டருக்கு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட் கொடுத்த ராகுல் காந்தியின் இது போன்ற சம்பவம் தான் காங்கிரசை விட்டு வெளியேற செய்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ஜனதா வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

    • பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி.
    • உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள்.

    சீர்காழி:

    சீர்காழியில் தி.மு.க. நகர இளைஞரணிஉதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்து வமனையில் நவம்பர் 27ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கும் தங்க கணையாழி வழங்கும் நிகழ்ச்சி நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசே கரன், துணை தலைவர் சுப்ப ராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, ஜெயந்தி முன்னிலை வகித்தனர்.குழந்தைகளுக்கு தங்க கணையாழிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் உட்புற நோயாளிகளுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பச்சிளம் குழந்தைகளுக்கு புத்தாடைகளும் வழ ங்கினார்.

    நிகழ்ச்சியில்விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் செல்வமுத்து, பொறியாளர் தன்ராஜ், நகர பொருளாளர்கள் கோட ங்குடி சங்கர், பந்தல்.முத்து, முன்னாள் பொருளாளர் துரை, நிர்வாகிகள் லெனின், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றிக் கூறினார்.

    • பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் பெருந்துறையை சேர்ந்த ரதீஷ்குமார் (33) என்பவருக்கு சொந்தமான பிஸ்கட் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பிஸ்கட் கம்பெனியில் பிஸ்கட் பேக்கிங் செய்ய பயன்படும் கவர்கள் மூட்டைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் கவர்களில் தீபிடித்து புகை வந்தது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பற்றி எரியத் தொடங்கியது.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    • பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று குழந்தைகளிடம் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். குழந்தைகள் பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு தந்தையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜ் அந்த பிஸ்கட் பாக்கெட்டை கைப்பற்றி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அது பிரிட்டானியா கம்பெனியின் தயாரிப்பு பிஸ்கட். இதனை பொங்கலூரில் உள்ள ஒரு விநியோகிஸ்தர் கடைக்கு வினியோகம் செய்துள்ளார். அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் வந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×