search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சூரி"

    • சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
    • சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது.
    • கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.

    ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

    • மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.
    • இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா,வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் வெற்றி அடைந்தது. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்தும் வெற்றி பெற்றார்.மேலும் 'விடுதலை' படத்தில் ஹிட் ஆனது. கடும் உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ் பேக்' உடலில் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்தார்.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது.இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறியதாவது :-

    விடுதலை- 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் தற்போது நான் நடிக்கும் 'கருடன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது.

    'விடுதலை- 2' படத்திற்கு முன்னதாக 'கருடன்' படம் ரிலீஸ் ஆகி விடும். விடுதலை- 2 படம் போலவே 'கருடன்' படமும் ஒரு நல்ல படமாகும். இந்த படம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்து உள்ளது.

    தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை யாரும் அழைக்க வில்லை.படம் நடிப்பில் நான் 'பிஸி' ஆக இருக்கிறேன்''.என தெரிவித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×