என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி
    X

    மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி

    • கடந்த வாரம் வெளியான மாமன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    கோவை:

    நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

    6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் வெளிவந்துள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின், கோவிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்த சூரி, மாமன் திரைப்படத்தைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×