`கருடன்' திரைப்படத்தின் டிரைலர் விரைவில்

'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார்.
`கருடன்' திரைப்படத்தின் டிரைலர் விரைவில்
Published on

'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சூரி பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் சூரி திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சூரிக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் மே 21 ஆம் தேதி காலை  சென்னை சத்யம் சினிமாவில் 9.30 மணியளவில் நடைப்பெறவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா, வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் பங்குப்பெறவுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com