கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி

சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சூரியும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரி
Published on

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஜாதி, மத பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி மகிழும் ஒற்றுமை திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வி.ஐ.பி.க்கள் வரிசை என்றில்லாமல் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரியும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டார். என்னதான் மதுரையில் பிறந்து வளர்ந்த போதிலும், அவரை பார்த்ததும் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் நடிகர் சூரியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அவரும் சற்றும் சளைக்காமல் குழந்தைகள், வாலிபர்கள், ரசிகைகள் என்று அனைவரோடும் நின்று செல்பியும், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முழுவதுமாக கண்டு ரசித்த பின்னர் அழகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com