search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர சிகிச்சை"

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
    • பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.அதே பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய விளை நிலம் உள்ளது.இந்த நிலத்தில் நேற்று மாலை நிலத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது.அப்போது அருகில் இருந்த முல்லைத் தோட்டத்தில் இருந்து கூட்டமாக பறந்து வந்த விஷ வண்டுகள்அ ங்கிருந்தவர்களை துரத்தி துரத்தி தாக்கியது.

    இதில் சுப்பிரமணி (வயது 49),பரமசிவம் (வயது 28) ஜெயக்கொடி, சிவா,பூங்கொடி ஆகிய 5 பேர்படுகாயம் அடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த பரமசிவம் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார்.
    • கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் சந்திரன் (43), இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு, மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார். அதற்கு சந்திரன் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என கூறியுள்ளார். இதனால், அதே ஊரைச் சேர்ந்த ராஜம் (38) என்பவரை அழைத்துகொண்டு, கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திரு.பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே, காலை 4.15 மணிக்கு சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வாண்டி (மினிவேன்) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், இருவரும் சாலையில் தூக்கியெறியப்பட்டு, தலை, கை, கால் முகம் என படுகாயம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரன், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கவுதமன் இறந்து போனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய, நன்னிலம் திருகொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • பழனி கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்
    • சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் கடந்த 29-ந்தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீராம் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    விழுப்புரம்:

    உளுந்தூர்பேட்ட வட்டம் கீழ்குப்பம்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீராம் (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு படுத்து உறங்கியபோது, ஸ்ரீராமை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறி துடித்த மாணவனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் மாணவன் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பாம்பு கடித்து மாணவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படப்பை அருகே உள்ள ஆதனூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர் ஆதலூர் ஊராட்சியில் தி.மு.க. அவை தலைவராக உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்யும் தொழிலும், ஜே.சி.பி. எந்திரத்தை வாடகைக்கு விட்டும் வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்கரபாணிக்கு பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்
    • உடலை டாக்டர்கள் தாயிடம் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற தாய் பல மணி நேரம் கழித்து தானாக திரும்பி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பகுதியை சேர்ந்த மணி (வயது 30), நரிக்குறவர். இவரது மனைவி சங்கீதா என்கிற சினேகா(25) கர்பமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சினேகாவை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பலவீனமாக சோர்ந்து காணப்படுவதால், மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பறிந்துரை செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களாக குழந்தை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சினேகா விடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அந்த குழந்தை நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சினேகா மருத்துவமனையில் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் தாலுகா போலீசில் ேநற்று புகார் அளிக்கப்பட்டது. குழந்தையை தாய் விட்டு ச்சென்றதாக மருத்துவ மனையில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் சினேகா தனது கணவர் மணி மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு பல மணி நேரம் கழித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையை விட்டுவிட்டு எங்கு சென்றீர்கள்? என்று கேட்டனர்.

    அப்போது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறிய தகவலை, ரத்தினகிரிக்கு சென்று தனது கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து வர சென்றதாக கூறினார். குழந்தையின் உடலை டாக்டர்கள் தாய் சினேகா விடம் ஒப்படைத்தனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நெல்லிக்குப்பத்தில் சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.
    • போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.வழக்கம் போல இன்று காலையில் அவர் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் தூக்க மாத்திரை அதிகளவில் விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரையை ஏன் விழுங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை முயற்சி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போதே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.
    • புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் மெயின் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது 7 வயது மகன் சாய். தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்றுமாலை தேவேந்திரனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் இருந்த சாய், உறவினர் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடினார்.

    அப்போது சாய் தனது வீட்டின் பால்கனியில் உள்ள கேட்டை திறந்து வெளியில் இருந்த சிறிய தூணில் நின்று ஒளிந்து கொள்ள இறங்கினார்.

    இதில் கால் தவறி அவன், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சாயை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மண் எடுத்துக் கொண்டு செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடப்பதை ஒட்டி வசதிகளை மேம்படுத்துவதற்காக அதே ஊரைச் சார்ந்த குணசேகரன் (வயசு 22) டிராக்டர் டிரைவர் ஆவார். அவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் இருந்து மண் எடுத்துக் கொண்டு அங்குள்ள சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் போது டிராக்டர் நிலை தடுமாறி தலைக்குப்பராக கவிழ்ந்தது .

    இதில் டிரைவர் குணசேகரன் பலத்த காயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக குணசேகர் இறந்தார். தகவல் அறிந்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து தினந்தோறும் குடித்து வந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மருதுவாஞ்சேரி தெற்கு தெரு மாரியப்பன் மகன் கண்ணன் (வயது 42). இவர் திருமணமானவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து, தினந்தோறும் குடித்து வந்த நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் கண்ணனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×