search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive treatment"

    • திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படப்பை அருகே உள்ள ஆதனூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர் ஆதலூர் ஊராட்சியில் தி.மு.க. அவை தலைவராக உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்யும் தொழிலும், ஜே.சி.பி. எந்திரத்தை வாடகைக்கு விட்டும் வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்கரபாணிக்கு பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்
    • உடலை டாக்டர்கள் தாயிடம் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற தாய் பல மணி நேரம் கழித்து தானாக திரும்பி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பகுதியை சேர்ந்த மணி (வயது 30), நரிக்குறவர். இவரது மனைவி சங்கீதா என்கிற சினேகா(25) கர்பமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சினேகாவை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பலவீனமாக சோர்ந்து காணப்படுவதால், மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பறிந்துரை செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களாக குழந்தை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சினேகா விடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அந்த குழந்தை நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சினேகா மருத்துவமனையில் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் தாலுகா போலீசில் ேநற்று புகார் அளிக்கப்பட்டது. குழந்தையை தாய் விட்டு ச்சென்றதாக மருத்துவ மனையில் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் சினேகா தனது கணவர் மணி மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு பல மணி நேரம் கழித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையை விட்டுவிட்டு எங்கு சென்றீர்கள்? என்று கேட்டனர்.

    அப்போது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறிய தகவலை, ரத்தினகிரிக்கு சென்று தனது கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து வர சென்றதாக கூறினார். குழந்தையின் உடலை டாக்டர்கள் தாய் சினேகா விடம் ஒப்படைத்தனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அடுக்கம்பாறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு காளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (வயது 38) . இவர் ஒண்ணுபுரம் கிராமத்தில் நாக நதி ஆற்றங்கரை அருகே உள்ள ரைஸ்மில்லில் நேற்று காலை வேலைக்கு சென்றார்.

    அப்போது பாய்லர் ஒன்று வெடித்ததில் அருகில் இருந்த கவிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பாப்பாத்தி (வயது51).இவர் திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சொந்த ஊர் செல்ல தண்டுக் காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். மேலும் அதே பஸ் நிறுத்தத்தில் தண்டுக் காரன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த காளியம்மாள்(60), அதேஊரைச் சேர்ந்த மஞ்சுளா(38) மற்றும் சின்னக்கானூர் பகுதியை சேர்ந்த ரங்கன் (52) ஆகியோர் புளியம்பட்டி செல்ல பஸ்சுக்காக காத்து நின்றனர்.

    அப்போது திருப்பூர் சாலையில் திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்தக் காரில் திருப்பூர் குமாரனந்தபுரத்தை சேர்ந்த கணேஷ் பிரதீப் (34),அவருடைய மனைவி சுமதி (32),மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர் .காரை கணேஷ் பிரதீப் ஓட்டினார் .இவர் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.

    இவருடைய கார் தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன் பின்னரும் அந்தக் கார் நிற்காமல் பஸ்சுக்காக காத்து நின்ற பாப்பாத்தி, காளியம்மாள், மஞ்சுளா மற்றும் ரங்கன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியதோடு அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காளியம்மாள் ,மஞ்சுளா ,ரங்கன் ஆகியோரும் காரில் இருந்த கணேஷ் பிரதீப்பின் இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்தனர் .உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரண்டு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
    • மது போதையில் வாலிபர் அரிவாளால் நண்பரை வெட்டிய சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிலன்தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சத் அலி(வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (33). இவர்கள் இருவரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் அம்சத் அலியும், ஷாஜகானும் மணிவிலன் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதில் போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அம்சத் தலையை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, தொடை , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அம்சத் அலிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் ஷாஜகான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அம்சத் அலியின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே ஷாஜகான் உடைத்து நொறுக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் சமரசமாகி நட்பை தொடர்ந்தனர். இந்த நிலையில் போதையில் ஷாஜகான் தனது மோட்டார் சைக்கிளை உடைத்தது தொடர்பாக அவரிடம் கேட்டு தகராறு செய்திருக்கலாம்.இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.





    • வழிப்பறி திருட்டு வழக்கில் கைதானவர்
    • சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தேவா (வயது 24).

    இவர் வழிப்பறி திருட்டு வழக்கில் ஆத்தூர் போலீ–சாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் தேவா நேற்று இரவு 11 மணி அளவில் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார். இதையடுத்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.உடனே சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ேதவாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து தினந்தோறும் குடித்து வந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள மருதுவாஞ்சேரி தெற்கு தெரு மாரியப்பன் மகன் கண்ணன் (வயது 42). இவர் திருமணமானவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து, தினந்தோறும் குடித்து வந்த நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் கண்ணனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் -கச்சனம் பிரதான சாலையில் கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சேகர் தனது மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன்நல்லூர் வடக்குத்தெற்கு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மோதியதில் சேகர் பலத்த காயமடைந்தார்.

    மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பாலாஜி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்த வாலிபர் பலியானார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஆலத்தம்பாடி ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக பிரிச்சுமூலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு தலைக்கீழாக கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரிழந்தார்.

    ×