search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண வரவேற்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
    • உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.

    இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

    • திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர்.
    • தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு உணவு அருந்தி செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    அந்த தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், லட்டு, சாக்லேட், சாத்துக்குடி, மாம்பழம், போட்டு கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் சிலர் சில்வர் தட்டு, கிப்ட் பாக்ஸ்கள் வைத்து கொடுப்பார்கள்.

    ஆனால் புதுச்சேரியில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்பில் தாம்பூல பையுடன் சேர்த்து மது பாட்டிலையும் கொடுத்துள்ளனர். இது திருமணத்துக்கு வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தாலும் குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

    சென்னையை சேர்ந்த மணமகன் ஒருவருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமகள் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுவை நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருமண வரவேற்பில் கலந்து கொண்டவர்களுக்கு மணமகள் வீட்டார் தாம்பூல பை வழங்கினர். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் குவாட்டர் மதுபாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர். திருமணத்திற்கு வந்த குடிமகன் விருந்தாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. திருமண மண்டபத்தில் இருந்த சில குடிமகன்கள் ஓடோடி சென்று போட்டி போட்டுக்கொண்டு தாம்பூல பையுடன் மதுபாட்டிலையும் வாங்கினர். இதற்காக அவர்கள் பெட்டி பெட்டியாக மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தனர்.

    ஆனால் சென்னையில் இருந்து வந்த மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். திருமணத்துக்கு வந்த பெண்கள் மற்றும் சிலர் முகம் சுளித்து சென்றனர்.

    • மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணமகன் தான் செய்தது தவறுதான், மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட போதிலும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட நகைகளை திரும்ப கேட்டார்.

    சமாதானம் செய்ய முடியாமல் திணறிய போலீசார், வேறுவழியின்றி மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×