search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒபாமா"

    • நீர் சறுக்கு விளையாட்டின்போது திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டார்
    • வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் பிடித்தமான சமையல்காரராக இருந்தவர்

    8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தபோது, அவரின் தலைமை சமையல்காரராக இருந்தவர் டஃபாரி கேம்ப்பெல் (Tafari Campbell). ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அவரின் இல்லத்து பிரத்யேக சமையற்கார குழுவுடன் டஃபாரியும் இணைந்து கொண்டார்.

    டஃபாரி நீரில் துடுப்பு பலகையில் நின்று சறுக்கி விளையாடும் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடுடையவர்.

    நேற்று முன்தினம் ஒபாமா இல்லத்தருகில் உள்ள எட்கார்டவுன் கிரேட் பாண்ட் எனும் நீர்நிலையில், நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக அங்கு நீர் சறுக்கில் ஈடுபட்டு வந்த மற்றொரு நபர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    அவசர குழுவினரின் நேரடி தேடுதலில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் கண்டறியும் சோனார் கருவி மூலம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இறுதியில், கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்தின்போது ஒபாமாவும் அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவும் வீட்டில் இல்லை. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த 8 வருட காலம் காம்ப்பெல், வெள்ளை மாளிகையில் புகழ்பெற்ற சமையல்காரராக திகழ்ந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு வித்தியாசமான பீர் உட்பட பல உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்துயர சம்பவம் குறித்து ஒபாமாவும் அவர் மனைவியும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அவரை முதல்முறை சந்திக்கும் போதே மிகவும் திறமை வாய்ந்த சமையல் கலைஞராக திகழ்ந்தார். மக்களை ஒன்றிணைக்கும் ருசியான உணவுகளின் குணங்கள் மீது அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்தார். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே டஃபாரி இருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு எங்கள் இதயங்கள் உடைந்தன.

    இன்று ஒரு உண்மையான, அற்புதமான மனிதரான டஃபாரியை நன்கு அறிந்த மற்றும் நேசிக்கும் அனைவருடனும், குறிப்பாக அவரது மனைவி ஷெரிஸ் மற்றும் அவர்களது இரட்டை மகன்களான சேவியர் மற்றும் சவின், ஆகியோருடன் அவரை இழந்த துக்கத்தில் பங்கு கொள்கிறோம்.

    இவ்வாறு ஒபாமாக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒபாமா குடும்பம், 2021-ம் ஆண்டில் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணியின் உரிமையாளர் விக்லிஃப் க்ரூஸ்பெக்கிடம் இருந்து மார்தா'ஸ் வைன்யார்டு தீவில், கிட்டத்தட்ட 7,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையை வாங்கியது. இந்த வீடு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஒரு குறுகிய தடுப்பு கடற்பகுதியால் பிரிக்கப்பட்ட கடற்கரை குளத்தை ஒட்டி உள்ளது.

    • இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது- ஒபாமா
    • இதன்மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும்- டிரம்ப்

    அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.

    கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் வகையில் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இனி மாணவ- மாணவியருக்கான விண்ணப்ப படிவத்தில் அனுமதி முறைகளுக்காக அவர்களின் இனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    இந்த தீர்ப்புக்கு முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமாவும், டொனால்ட் டிரம்பும் எதிரெதிர் நிலைகளை எடுத்துள்ளனர்.

    இந்த தீர்ப்புக்கு மாறான கருத்துடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:-

    கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை நாங்களும் இந்த மண்ணை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எனது மனைவி மிச்செல் உட்பட பல தலைமுறை மாணவர்களை அனுமதித்தது. அனைத்து மாணவர்களுக்கும் இனம் பாராமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இதுபோன்ற கொள்கைகள் அவசியம்.

    அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டவர்களுக்கு, நாங்களும் தகுதியுடையவர்கள் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை அளித்து வந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், இந்த தீர்ப்பை வரவேற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத்" (Truth) சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    இதன் மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும். எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்ப்பு இது. நம்முடைய மிகப்பெரிய மனங்கள் போற்றப்பட வேண்டும். அதைத்தான் இந்த அற்புதமான நாள் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தும் இனி தகுதியின் அடிப்படைலேயே நிர்ணயம் செய்யப்படும் என்கின்ற நிலைக்கு நாம் திரும்புகிறோம். இது இப்படித்தான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

    இந்த தீர்ப்பு குறித்து கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டிருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பல தசாப்தகால முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    • டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர்.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார்.

    டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மலியா ஒபாமா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ஒரு குறும்படத்தில், முதல் முறையாக இயக்குநராக தனது பணியை தொடங்க உள்ளதாக டொனால்ட் குளோவர் சமீபத்தில் தெரிவித்தார்.

    டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாலியா ஒபாமா ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரி. அவர் லீனா டன்ஹாமின் பெண்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து வெய்ன்ஸ்டீன் நிறுவனத்தில் ஹாலே பெர்ரி நடித்த அறிவியல் புனைகதை நாடகத் தொடரான எக்ஸ்டாண்டில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றினார்.

    • எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து 'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.

    மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.

    இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார். ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார். மிச்செல்லும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×