search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் கோவில்"

    • ஆஞ்சநேயர் கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது.
    • வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் 32 அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் வடைமாலை தரிசனத்துக்கும் சிறப்பு பெற்றது. இதற்கு சேவை கட்டணங்கள் உள்ளன.

    இந்நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பூர்ண வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆகவும், சிறிய வடை மாலைக்கான சேவைக்கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.800 ஆகவும், தீப நெய் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை பக்தர்கள் வருகிற 28-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
    • தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு

    சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    வடுவூர் தெற்கு தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதைப்போல தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார்.
    • பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.

    நாமக்கல்:

    பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார்.

    அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளையராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சாமி தரிசனம் செய்த மனீந்தர் ஜீத் பிட்டாவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் நினைவு பரிசாக ஆஞ்சநேயர் படம் வழங்கப்பட்டது.

    பின்னர் மனீந்தர் ஜீத் பிட்டா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்காக நாமக்கல் வந்துள்ளேன். மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் செல்கிறேன். சில அரசியல் கட்சிகள், ராமர் கட்டிய பாலம் இல்லை என சொல்கின்றனர்.

    அது கற்பனை. அவ்வாறு இருந்திருந்தால், அந்த பாலம் உடைந்து விட்டது என கூறுகின்றனர். ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன். இந்த உடலில் உயிர் இருக்கின்ற வரையில், நான் அதை நிரூபித்துவிட்டுத்தான் செல்வேன்.

    இலங்கைக்கு செல்ல சேது பாலம் கட்டும்போது, ராமருக்கு ஆஞ்சநேயர் எப்படி உறுதுணையாக இருந்தாரோ, அதேபோல், பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கும் நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.
    • கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புங்கனூர் அடுத்த ராஜா நாலா பண்ட கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஊருக்கே காவல் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

    இந்த கோவிலில் யாராவது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் வீடு திரும்பியவுடன் கடவுள் உரிய தண்டனை கொடுப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதே போல் ஏராளமானோர் பொய் சத்தியம் செய்து வீட்டிற்கு சென்றவுடன் இறந்தும், விபத்தில் படுகாயமடைந்து கை கால்களை இழந்தும் பல வழிகளில் இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.

    இதனால், கோவிலில் பொய் சத்தியம் செய்ய பொதுமக்கள் முன் வருவதில்லை.

    இந்நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி புங்கனூர் அடுத்த மேலு பைலு கிராமத்தை சேர்ந்த நாகய்யா என்பவரின் மகனான வெங்கடர மணா வீட்டில் இருந்த தங்க செயின், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகிய நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடரமணா கிராமத்தில் உள்ள பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டினர்.

    அதில், வீட்டில் ஒருவர் வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சத்தியம் செய்ய வர வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர், கிராமத்தில் உள்ள அனைவரும் வரும் 9-ந்தேதி சத்தியம் செய்ய வர வேண்டும் என உத்தரவு போடப்பட்டது.

    இந்த நிலையில், தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பல் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் பொய் சத்தியம் செய்தால் ஆபத்து ஏற்பட்டுவிடும் என கருதியுள்ளனர்.

    நேற்று முன்தினம் வெங்கட ரமணா வீட்டின் மேல்மாடியில் திருட்டு நகைகளை வீசி விட்டு சென்றனர்.

    நகைகள் அனைத்தும் மாடியில் இருப்பதை கண்ட வெங்கடரமணாவின் குடும்பத்தினர் ஊர் பெரியோர்களிடம் நடந்ததை கூறினர்.

    கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கிடைத்த நகைகளை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
    • ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவட்டாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைப்பு மற்றும் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று காலை குழந்தைகள் நலனுக்காகவும், ஆன்மிகத்தில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளவும் ஆஞ்சநேய சனீஸ்வர ஹோமம் நடந்தது. ஆஞ்சநேய சாமி அறக்கட்டளை மற்றும் ஆஞ்சநேய சாமி கோவில் நிறுவனர் ஆஞ்சநேய சித்தர் ஹோமத்தை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, கவச மந்திரம் வழங்கப்பட்டது.

    மாலையில் திருவட்டார் சந்திப்பில் இருந்து பஞ்சவாத்தியம் முழங்க, முத்துக்குடைகளுடன் 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆஞ்சநேய சித்தர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 48-வது மடாதிபதி மூப்பில் சாமியார் ஸ்ரீபுஷ்பாஞ்சலி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை அகில இந்திய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீராமானந்தா சுவாமிகள் முன் சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாழும் முறை, வாழ்க்கையில் மேன்மையடைய செய்ய வேண்டியவை, கடவுள் பக்தியின் சிறப்பு ஆகியவை குறித்து சன்னியாசிகள் சிறப்புரையாற்றினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த ஆஞ்சநேயர் சிலையை காணவில்லை.
    • பக்தர்கள் முன்னிலையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் 500 ஆண்டு கால பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவிலில், ஆஞ்சநேயர், ஆதி தீர்த்தர், உள்ளிட்ட பல்வேறு சிலை கள் உள்ளன. இந்த நிலை யில் நேற்று மாலை பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த ஆஞ்சநேயர் சிலையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து இந்து அற நிலையத்துறை செயல் அலுவலர் ராமசாமியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர் கோவிலுக்குள் வந்து அங்கிருந்த அர்ச்சகரிடம் விசாரணை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து, பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர்கள் வினோத் வெங்கடேஷ், ஜோதிமணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சசிரேகா ரமேஷ்குமார், நிர்வாகிகள் ஈஸ்வரன், திலீப்குமார், கமலேஷ், தினேஷ் மற்றும் பொது மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆஞ்சநேயர் சிலை குறித்து உண்மை தெரியும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூ றி உள்ளிருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமை யிலான போலீசார் அவர்க ளுடன் பேச்சுவா ர்த்தை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் இங்கிருந்த ஆஞ்சநேயர் சிலை, மாதப்பூ ர் அனுமந்தராயர் கோவிலில் கொண்டு போய் வைக்க ப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கோவி லில் இருந்து ஆஞ்சநேயர் சிலை காரில் எடுத்து வர ப்பட்டு, பக்தர்கள் முன்னி லையில் மீண்டும் பிரதி ஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்ச நேயருக்கு மாலை அணி வித்து தீபாரா தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்ற னர். இது குறித்து அறநிலை யத்துறை அதிகா ரிகள் கூறுகையில், சிலையை இடமாற்றம் செய்தது குறித்து விசா ரணை மேற்கொ ண்டுள்ளோம். விசாரணைக்கு பின் நட வடிக்கை எடுக்க ப்படும் இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர். பல்லடத்தில் ஆஞ்சநேயர் சிலை இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம், வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.
    • காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது.

    உடுமலை :

    உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் சீனிவாசா ஆஞ்சநேய பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 2 ந் தேதி துவங்கிய நிலையில்காலை 5:45 மணிக்கு மேல் கணபதி பூஜை ,புண்யாஹவாசனம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7.30 மணிக்கு கும்ப ஸ்தாபனம், மண்டபார்ச்சனை, யாகசாலை பிரவேசம் ,வேத பாராயணம், முதற்கால பூஜை, ஹோமங்கள் நடைப்பெற்றது.

    கும்பாபி ேஷகத்தையொட்டி காலை 5 மணிக்கு பிரதிஷ்ட ஹோமங்கள், காலை 7.30 மணிக்கு யாத்திரா தானம் ,கடம் புறப்பாடு நடைப்பெற்றது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் , பக்தர்களுக்கு வழங்கபட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய த்துறையினர் செய்து இருந்தனர்.

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர், நாமகிரித் தாயார் கோவில் உள்ளது.
    • குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர், நாமகிரித் தாயார் கோவில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு இருக்கும் நாமகிரித்தாயார் , லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடனாக வேஷ்டி, புடவைகள் சாற்றுவது வழக்கம்.

    அந்த வஸ்திரங்களை குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது. அதன்படி இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வஸ்திரங்கள் ஏலம் நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களுக்கு தேவையான பொருட்களை ஏலம் எடுத்தனர். 

    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • திருப்பணியை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூரில் பாலாற்றங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு முதல் கால பூஜை, மகா சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமுறை, 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, காலை 7 மணிக்கு பஞ்சசூக்தாதிேஹாமம், சகஸ்ரநாம ஹோமம், மகா பூர்ணாகுதி, சாற்றுமுறை கடம்புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி கோபுர த்திற்கு கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவினை காண கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.நாளை முதல் தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கிறது. வருகிற மார்ச் மாதம் 21-ந் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் ப.கந்தசாமி மற்றும் திருப்பணி விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • மதுரை கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
    • ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.



    மதுரை

    மதுரையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலைகள் சார்த்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.

    இன்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    இன்று இரவு ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

    தல்லாக்குளம், சிம்மக்கல், டி.எம்.கோர்ட்டு சந்திப்பு, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    • திருவையாறு ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சராபிஷேகம் நடந்தது.
    • மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் 7 ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா ஆராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் வருசாபிஷேகம் தரிசனம் செய்து அருள் பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு துளசி தல அர்ச்சனை செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் வீதிஉலா வந்தருளினார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    ×