search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
    X

    பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • திருப்பணியை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூரில் பாலாற்றங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு முதல் கால பூஜை, மகா சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி, சாற்றுமுறை, 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, காலை 7 மணிக்கு பஞ்சசூக்தாதிேஹாமம், சகஸ்ரநாம ஹோமம், மகா பூர்ணாகுதி, சாற்றுமுறை கடம்புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி கோபுர த்திற்கு கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவினை காண கோவை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.நாளை முதல் தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கிறது. வருகிற மார்ச் மாதம் 21-ந் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் ப.கந்தசாமி மற்றும் திருப்பணி விழா குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×