ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றதுதேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

திருவாரூர்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு

சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

வடுவூர் தெற்கு தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதைப்போல தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com