என் மலர்
நீங்கள் தேடியது "சுப்ரமணிய சுவாமி"
- 1950களில் நடந்த ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.
- மோடியும் அவரது குழுவினரும் இவ்வளவு காலமாக செய்து வருவது வெறும் பிரச்சாரம் மட்டுமே
அகமதாபாத் விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "1950களில் நடந்த ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மிட் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் அதே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன்.
அப்போதுதான் விபத்து குறித்து சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது குழுவினரும் இவ்வளவு காலமாக செய்து வருவது வெறும் பிரச்சாரம் மட்டுமே. இது முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் விமானம் விபத்துகுள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
- உளவுத் துறையின் தோல்வி என உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் உளவுத் துறையின் தோல்வி என உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது.
கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது.
- காவிரி தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவம் சிறப்பு.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.
பூக்கள் நிரப்பும் விழா
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
தலைப்பாகை அணியும் அகத்தியர்
ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒரு நாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.
கல்லுமடை மீனாட்சியம்மன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுணர்மி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது.
பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
காவிரி தாயாருக்கு சீர்வரிசை!
ஸ்ரீ ரங்கத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாக பெருக்கெடுத்து ஓடும். இதனை காண அரங்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!
ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரி தாயாருக்கு மாலை, தாலி, பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தை காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாக கூடி பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!
- பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.
- பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார். தற்போது தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் காங்கிரஸ் தலையாமையிலான இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தைப் பிடித்த நிலையில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலிலும் பாஜக சறுக்களை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் இடைத்தேர்தல் சறுக்கல் குறித்து சுப்ரமணிய சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும். இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்குவதற்கான விரிசல்கள் விழுந்து வருவதையே குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். உள்ளடியாக சுப்ரமணிய சுவாமியின் இந்த கருத்து பாஜக மேலிடத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார்.
- மோடி ஜி அடுத்த வருடம் 75 வயதை எட்ட உள்ளார். எனவே அமித் ஷா பிரதமர் ஆவார்
பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார்.
சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும் என்று கடுமையாக விமர்சனத்தை முனைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சி விதிப்படி மோடி, 2025 செப்டம்பர் 17 அன்று தனது 75 வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 75 வயதில் ஓய்வு பெரும் விதி மோடிக்குப் பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில் சுப்ரமணிய சுவாமி இவ்வாறு பதிவிட்டுள்ளது பேசுபொருள்ளாகியுள்ளது.
முன்னதாக மக்களவை தேர்தல் சமயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரச்சாரத்தின்போது பேசுகையில், இவர்கள் இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் பாஜக கூட்டணியின் பிரதமர் முகம் யார், 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று மோடி ஏற்படுத்திய விதியின்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரை ஓய்வு பெறச் செய்தனர். ஆனால் மோடி ஜி அடுத்த வருடம் 75 வயதை எட்ட உள்ளார். எனவே பிரதமர் நாற்காலியில் அமர உள்ள அமித் ஷாவுக்காக ஓட்டுக் கேட்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பதவிக்கு வந்த 15 நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் திரும்பக் கொண்டு வருவேன் என்று கூறியதே அதற்கு உதாரணம்
- டிரம்பின் ஷூவை துடைக்க மோடிக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் வெயிட்டர் [ ஜெய்சங்கர்] கூறக்கூடும்
பொய் பேசும் மோடிக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்ததற்குப் பிராயச்சித்தம் தேட உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அக்பருக்கு பீர்பால் போல் தான் மோடிக்கு இருக்க வேண்டும் அவர் விரும்பினார் என்றும் அதனை தான் ஏற்கவில்லை என்பதற்காக மோடி தன்மீது கோபமடைந்தார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.
2014 மக்களவை தேர்தலில் மோடிக்காக பிரச்சாரம் செய்ததற்காகத் தான் தற்போது பரிகாரம் செய்ய உள்ளேன். மோடி எப்படிப்பட்ட பொய்யராக மாறியிருக்கிறார். பதவிக்கு வந்த 15 நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் திரும்பக் கொண்டு வருவேன் என்று கூறியதே அதற்கு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக மோடி மற்றும் அமித் ஷாவை பல சந்தர்ப்பங்களில் சுப்ரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் அவருக்கு வந்த அழைப்புகளில் மூன்றாவதாக அட்டண்ட் செய்தது மோடியின் அழைப்பைத்தான் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மோடியின் செல்வாக்கு குறித்து சிலாகித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சுப்ரமணிய சுவாமி, மோடியின் அழைப்பை டிரம்ப் மூன்றாவதாக ஏற்றார் என்றால் முதல் 2 அழைப்பு யாருடையது, 1.43 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஜெய்சங்கர் கூறிய இந்த விஷயத்தை தலைப்புச் செய்தியாக போடுகிறார்கள். விரைவில் டிரம்பின் ஷூவை துடைக்க மோடிக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றும் வெயிட்டர் [ஜெய்சங்கர்] கூறக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.








