search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ragupathy"

    • திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம்.
    • திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை

    சென்னை:

    லியோ சிறப்பு காட்சி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- லியோ படம் தொடர்பாக அரசியல் நடப்பதாக சொல்கிறார்கள். ஒருசில ஆளும் கட்சி சார்ந்த தயாரிப்பு நிறுவனம் கேட்டால் சிறப்பு காட்சி உடனே கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்களே?

    பதில்:- எங்களை பொறுத்தவரை 6 காட்சி சிறப்பு காட்சி வேறு. 5 காட்சி சிறப்பு காட்சிகள் என்பது வேறு. எனவே 6 சிறப்பு காட்சி கொடுக்கிற போதுதான் காலையில் 4 மணிக்கு, 5 மணிக்கு என்பது போன்ற பிரச்சனை வருகிறது.

    5 காட்சிகள் என்பது 9 மணியில் இருந்து 1.30 மணிக்குள் முடித்து விடலாம். அதோடு கூடுதல் காட்சிகள் கேட்கும் போது தான் அதை எப்படி கொடுப்பது என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

    கேள்வி:-காலை 9 மணி காட்சியை முன் கூட்டியே கேட்கிறார்களே?

    பதில்:-ரசிகர் மன்றம் என்று சொல்லி கேட்கிற போது எத்தனை மணி என்றாலும் அவர்களது ரசிகர்கள்தான் பார்க்க போகிறார்கள்.

    எங்களை பொருத்தவரை அரசாங்கம் எடுக்கிற முடிவுதான். நாங்கள் என்றைக்குமே சினிமாவில் எந்தவிதமான தடைகளும் போடுவதில்லை.

    திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம். திரையுலகத்தோடு நாங்கள் நெருங்கிய நட்பாகத்தான் இருப்போமே தவிர அவர்களது விரோதத்தை நாங்கள் சம்பாதித்து கொள்ள எங்கள் தலைவர் முதலமைச்சர் விரும்ப மாட்டார்.

    கேள்வி:- தி.மு.க. அரசு திரைத்துறையை முடக்க பார்ப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரே?

    பதில்:- அவர்கள் அன்றைக்கு திரையுலகை என்ன பாடுபடுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். போகிற போக்கில் அவர் பேசுகிறார்.

    திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் நன்றாக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.

    சென்னை:

    தமிழக அரசின் சட்ட கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 மாணவ, மாணவியர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு சட்டக் கல்லூரியில் மொத்தமாக எம்எல் படிப்பிற்காக 1607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அது பரிசீலனை செய்யப்பட்டு 11 அரசு சட்டக்கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 420 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 10 நபர்களுக்கு இன்று தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை செய்து தருவோம்.

    நீண்டகால சிறைவாசிகள் 49 பேருக்கு விடுதலை செய்ய ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோப்புகள் அனைத்தும் தற்போது வரையிலும் நிலுவையில் உள்ளது.

    கேள்வி:- நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை செய்ய தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமாட்டார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்:- அதாவது கவர்னரும், அண்ணாமலையும் ஒன்று என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். கவர்னர் தான் அண்ணாமலை. அண்ணாமலைதான் கவர்னர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
    • ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இதற்கிடையே, அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்த புகாருக்கு முறையான பதிலைத் தராமல் மழுப்பலான பதிலை ஆளுநர் அளித்துள்ளார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார். தான் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம் அனுப்பவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு மட்டுமே வந்துள்ளது என தெரிவித்தார்.

    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது.

    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
    • சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

    இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை கவர்னர் வழங்கவில்லை.

    ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×