என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி தாக்கு
    X

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி தாக்கு

    • தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
    • பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    சென்னை:

    கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திராவிடம் என்பது கற்பனை எனக்கூறிய ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாஜகவின் ஊதுகுழலாகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    திராவிடம் என்ற வார்த்தை தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது என்பது ஆளுநருக்கு தெரியாதா?

    எங்கே சென்றாலும் தமிழர்களை இழிவுபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் கிடையாது.

    தமிழ்நாட்டில் இருக்கும் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

    தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது என்ற கருத்து ஏற்கக் கூடியதல்ல என தெரிவித்தார்.

    Next Story
    ×