என் மலர்

  நீங்கள் தேடியது "மாணவர் தற்கொலை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
  • ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் வயது 15 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

  பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டில் பானு அவரது மகன் மற்றும் மகளும் இருந்தனர்.

  மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.

  தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்க சென்றார். இன்று அதிகாலையில் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது அறை கதவை திறந்து பார்த்தபோது மது பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  இதை பார்த்து அவரது தாயார் மற்றும் சகோதரி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மது பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • பிளஸ்-2 படித்து வந்தார்.

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மான்குறிச்சிபட்டியை சேர்ந்தவர் முத்துமுருகன். இவரது மகன் சூர்யா(வயது 17). இவர் நற்சாந்துபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையே சூர்யா, தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தற்போது படிப்பில் கவனம் செலுத்தும்படியும், படித்து முடித்தபிறகு செல்போன் வாங்கி தருவதாகவும் சூர்யாவிடம் முத்துமுருகன் கூறியதாக தெரிகிறது.இதனால் மனவேதனை அடைந்த சூர்யா கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறி கொக்கியில் வயரால் தூக்குப்போட்டு தொங்கினார்.

  இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துமுருகன் பனையப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ெசல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜானகிராமன் (வயது 17). பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

  பிளஸ்-1 தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த ஜானகிராமன் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வில் தேர்ச்சி பெறாததால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பிரசாந்த் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதில் பிரசாந்த் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன வேதனையில் காணப்பட்டார்.

  சம்பவத்தன்று வீட்டில் உள்ள பேனில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். கண்ட அவரது உறவினர்கள் பிரசாந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரசாந்த் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது.
  • இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

  திருமங்கலம்:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

  நேற்று வெளியான தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டின் அருகிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

  சிறிது நேரத்தில் சுபாஷ் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கி கணக்கில் ரூ. 10 ஆயிரம் பணம் குறைந்ததால் தந்தைக்கு பயந்து மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தஞ்சாவூர்:

  திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மணிகண்டன் (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் வல்லத்தில் தனி அறை எடுத்து நண்பர்களோடு தங்கி இருந்தார்.

  கனகராஜ் தனது மகன் வங்கி கணக்கில் தான் பணம்போட்டு எடுத்து வந்தார். மணிகண்டன் தான் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுப்பாராம்.

  இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் குறைந்துள்ளது. இதுபற்றி தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் மணிகண்டன் அவரது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  இதுபற்றி அவரது நண்பர்கள் வல்லம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×