என் மலர்
நீங்கள் தேடியது "திமுகு"
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மார்ச் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஒரு நாளில் காலை 9 மணி, மாலை 4 மணி என இரண்டு கட்டமாக நேர்காணல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 17ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மார்ச் 18ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 19ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 20ம் தேதி நடக்கிறது.
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு 21ம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது.
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட வேட்பாளர்களுக்கு மார்ச் 22ம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
- 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார்.
- எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை என்றும், கிராமப்புறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்திற்கும், துணை போகும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில், 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள்.
கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.
வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார். திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினார்கள்.
2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டு தோறும் குறைத்து நிதியை ஒதுக்கி வந்தார்கள்.
இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு வஞ்சித்தது. 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான்.
இந்தத் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைப்பதில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன.
இப்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வாய் ஜாலங்களுடன் 'விபி-கிராம் ஜி' எனும் புதிய சட்டத்தை எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கொண்டு வந்தது.
கிராமப்புற ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதும், தேசப்பிதா காந்தியாரின் பெயரை நீக்குவதும்தான் பாஜக அரசின் ஒரே நோக்கம் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டினார்கள்.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்குக் கடுமையான எதிர்ப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்தார்கள்.
இந்தப் புதிய சட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கும், மக்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள் என்றெல்லாம் சமாளிப்பு பதில்களைக் கூறிக் கொண்டிருந்த ஒன்றிய பாஜக அரசு, இதுவரை இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? என்ற எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருக்கிற இந்தச் சட்டத்திற்கான அடிப்படை விதிகளையே இன்னும் வகுக்காமல் ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என்பதற்கான எந்தத் தெளிவான வழிகாட்டலும் இன்னமும் வகுக்கவில்லை. கிராம ஊராட்சிகளை எந்த அளவுகோல்களின் அடிப்படையில் தரம் பிரிப்பது என்பதும் இறுதி செய்யவில்லை.
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்காததைப் பார்க்கும் போது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாஜக அரசு முற்றிலும் பறிக்க முயல்வது அப்பட்டமாகத் தெளிவாகிறது. விபி-கிராம் ஜி சட்டத்திற்கு இதுவரை ஒன்றிய அரசு செய்தது விபி-கிராம் ஜி திட்டத்திற்கு 50 ஆயிரம் ரூபாயில் லோகோ உருவாக்கியது மட்டுமே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தால் கிடைத்த பலன்கள் கூட விபி-கிராம் ஜி சட்டத்தால் கிடைக்காத போதும், புதிய சட்டத்தைக்கூட அமல்படுத்த மோடி அரசு தயங்குகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது 100 நாள் வேலைத் திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக் கட்டும் முடிவில் மோடி அரசு இருப்பதையே இன்றைய செயல்பாடுகள் காட்டுகின்றன.
வாயில் நுழையாத வட மொழி பெயர் கொண்ட விபி-கிராம் ஜி திட்டத்தில் மாநிலங்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். 'வேலை என்பது அடிப்படை உரிமை' என்ற நிலையிலிருந்து 'தேவை அடிப்படையில் வேலை' என மாற்றம் செய்யப்பட்டது. 100 சதவிகித ஒன்றிய அரசின் நிதிப் பங்கீடு என்பதை 60:40 என மாற்றி மாநிலங்கள் மீது கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
கிராமங்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளும் புதிய திட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 கோடி கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்குரிய ஊதியத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காத போதெல்லாம் அந்த உரிமைக்காகச் சட்டப்பூர்வமாகவும் மக்கள் மன்றத்திலும் திமுக போராடியது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது
ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியோ இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்குத் துரோகத்தைச் செய்தார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து தனது துரோகப் பணியைச் செவ்வனே செய்து முடித்த பழனிசாமி, தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதும் தெரிந்தும் 150 நாட்களாக வேலையை உயர்த்துவேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.
புதிய சட்டத்தை ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூடச் சொல்ல பழனிசாமிக்கு துணிவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செய்து வரும் வஞ்சகத்திற்கும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்கும் மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
- அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.
பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.
வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடி கொண்டிருக்கும்போது ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உயிராக இயக்கும் களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
- பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.
தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
- வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது என பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
அதில், குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் தாமரை வேண்டாம் என கூறும் நீங்கள் தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.






