என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 என முதல் செட்டை வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 6-7 (1-7), 4-10 என்ற செட் கணக்கில் இழந்து தொடரில் இருந்து வெளியேறியது யூகி பாம்ப்ரி ஜோடி.

    • இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் மோதலை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த டாமி புரூஸ், "இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு அனுபவம் இருந்தது. இரு நாடுகள் இடையேயான மோதல் பயங்கரமாக வளர்ந்திருக்கலாம். இதை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது" என்றார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் கலின்ஸ்கயா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெண்டா அனிசிமோவா 3வது சுற்றுடன் வெளியேறினார்.

    அமெண்டா அனிசிமோவா விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் காப்ரியல் டயல்லோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
    • பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதிக்க தொடங்கினார்.
    • அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

    அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

    இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.

    இந்நிலையில், சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.

    இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.
    • காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு என அமெரிக்கா கூறியது.

    நியூயார்க்:

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாத்தது.

    குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு எனக் கூறியது. அத்துடன் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க தயாராகி உள்ளது.

    அதேநேரம் சீனா, ரஷியா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அபாயத்தை வெளிப்படுத்தின.

    குறிப்பாக, காசாவில் மக்களுக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையை ஏற்க முடியாது என சீனாவும், அங்கே பொறுப்பற்ற விரோதப் போக்கு தொடர்வதற்கு எதிராக ரஷியா எச்சரிக்கையும் விடுத்தன.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

    நேற்று நடந்த 2வது சுற்றில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா உடன் மோதினார்.

    இதில் கேமரூன் நூரி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.

    இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.

    • அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.
    • ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.

    ரஷியாவின் தெற்கே தெற்கு காகசஸில் உள்ள ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அமெரிக்கா சென்றுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.

    எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் ஒரு பெரிய போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.

    ஒப்பந்தத்தின்படி இந்த வழித்தடத்தின் உரிமைகளை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும்.

    இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான "டிரம்ப் பாதை" என்று அழைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறப்படுகிறது.

    இதை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும், இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.  

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

    இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் 27 வயது ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

    கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த படோசா, முதுகுவலி காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர், சிட்சிபாஸ் ஆகியோர் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.

    இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் இலாஹி கலன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் பேபியன் மாரோசானை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×