என் மலர்
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 என முதல் செட்டை வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 6-7 (1-7), 4-10 என்ற செட் கணக்கில் இழந்து தொடரில் இருந்து வெளியேறியது யூகி பாம்ப்ரி ஜோடி.
Next Story






