என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

    அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர தினத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் வர்த்தகத்திலும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை அமெரிக்கா மிகவும் பாராட்டுகிறது. கனிமங்கள், ஹைட்ரோகார்பன் போன்ற துறைகளில் இருநாடுகளின் புதிய ஒத்துழைப்பின் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்கா எதிர்நோக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு 50% வரிவித்துள்ள அமெரிக்கா பாகிஸ்தானிடம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலாஸ்காவில் டிரம்ப்- புதின் சந்திப்பு நாளை நடைபெறுகிறது.
    • உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.

    இதன்தொடர்ச்சியாக நாளை இருவரும் சந்தித்து பேச இருக்கிறார்கள். அப்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சந்திப்புக்குப்பின் உக்ரைன் போரை புதின் தொடர்ந்து நடத்தினால், அங்கோ (ரஷியாவுக்கு) மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என டெனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாட்டு தலைவர்களுடன் டொனால்டு டிரம்ப் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அலாஸ்காவில் நடைபெறும் அமெரிக்கா- ரஷியா மாநாட்டின்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க விரும்புகிறது என்பதை தெளிவாக டிரம்ப் கூறியதாக பிரான் அதிபர் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

    • இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
    • பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது.

    இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

    அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

    தேடுபொறி சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்க குரோமை விற்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை பரிந்துரைத்து வரும் நேரத்தில், பெர்ப்ளெக்ஸிட்டி இந்த மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.

    இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான நிதி வெளிப்புற முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை வணிக அதிகாரி டிமிட்ரி ஷெவெலென்கோ தெரிவித்தார்.

    ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    சலுகையை உறுதிப்படுத்திய பெர்ப்ளெக்ஸிட்டி, ஒப்பந்தம் வெற்றியடைந்தால் குரோமில் முக்கிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்தது.

    பெர்ப்ளெக்ஸிட்டி தற்போது அதன் AI உடன் இயங்கும் 'காமெட்' (Comet) என்ற browser ஐ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    • நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ட்ரேசி ஆர்ம் என்ற பகுதி உள்ளது.

    இங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகம் உள்ளன.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு மலையின் ஒரு பெரிய பகுதி கடலில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 100 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சுனாமி அலைகள் உருவாகி கடற்கரை பகுதிகளை மூழ்கடித்தன.

    இது ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானது முதல் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.

    • இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.
    • அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.

    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    கலிபோர்னியாவின் நியூவார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    காலிஸ்தானி பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்ரன்வாலே-வை புகழ்ந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் கிராஃபிட்டிகள் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

    இதை கவனித்த கோயில் நிர்வாகிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பதிலளித்த நியூவார்க் காவல் துறை, இது வெறும் ஒரு சாதாரண நாசவேலைச் செயல் மட்டுமல்ல, வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியது.

    இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்தது.

    அமெரிக்காவில் இந்து கோவில்கள் தாக்கப்படுவது இந்த ஆண்டு இதோடு நான்காவது முறை ஆகும்.

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுகிறது.
    • F-16 விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    அதன்பின் மே 7 முதல் மே 10ஆம் தேதி வரை 88 மணி நேரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக் கொள்ள சம்மதித்தன.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் ரஃபேல் விமானங்களும் அடங்கும் எனத் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன எனத் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களா? அலல்து இந்தயி போர் விமானங்களா? என்று அவர் குறிப்பிடவில்லை.

    இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னதாக இந்திய விமானப்படை தளபதி, பாகிஸ்தானைச் சேர்ந்து 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். மேலும், ஒரு பெரிய விமானத்தை வீழ்த்தினோம் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அமெரிக்க அரசிடம், F-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது.

    இதற்கு அமெரிக்கா நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டது. மேலும், F-16 விமானங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசாங்கத்திடம் நாங்கள் உங்களைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறியுள்ளது.

    அமெரிக்க நிறுவனம்தான் பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானத்தை வழங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் என்ற குழு பாகிஸ்தானில் 24/7 என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த குழு F-16 போர் விமானத்தின் முழு விவரத்தையும் ஒப்பந்த்தின்படி அறிந்து கொள்வது அவர்களது கடமையாகும். அப்படி இருக்கும்போது F-16 போர் விமானம் குறித்த தகவல்கள் அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-போர்ச்சுகல்லின் பிரான்சிஸ்கோ கேப்ரால் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3 என முதல் செட்டை வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 6-7 (1-7), 4-10 என்ற செட் கணக்கில் இழந்து தொடரில் இருந்து வெளியேறியது யூகி பாம்ப்ரி ஜோடி.

    • இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது.
    • இந்தியா- பாகிஸ்தான் மோதலை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.

    பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்டினால் ஏவுகணைகளை வீசி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூசிடம், பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் மற்றும் இந்தியாவுக்கு அவர் விடுத்த மிரட்டல் ஆகியவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த டாமி புரூஸ், "இந்தியா- பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு மாறாமல் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு அனுபவம் இருந்தது. இரு நாடுகள் இடையேயான மோதல் பயங்கரமாக வளர்ந்திருக்கலாம். இதை தடுக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது" என்றார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் கலின்ஸ்கயா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெண்டா அனிசிமோவா 3வது சுற்றுடன் வெளியேறினார்.

    அமெண்டா அனிசிமோவா விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் காப்ரியல் டயல்லோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
    • பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதிக்க தொடங்கினார்.
    • அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

    அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

    இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.

    இந்நிலையில், சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.

    இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    ×