என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
    • நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று புதின் கூறினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வருகிறார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் வந்து சேர்ந்தனர். அங்கு அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது.

    இந்நிலையில், இரு நாட்டு அதிபர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அதிபர் புதின் கூறியதாவது:

    எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

    நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான்.

    டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.

    உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு அடிப்படையில் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.

    அதேவேளை, நீண்டகால தீர்வை உருவாக்குவதற்காக, போருக்கான முதன்மை விளைவுகள் எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டிய தேவை உள்ளது என எங்களிடம் கூறப்பட்டது.

    உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் இன்று கூறியதற்கு உடன்படுகிறேன்.

    அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

    அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார்.

    இதையடுத்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு, அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் தனித்தனியாக விமானத்தில் வந்து சேர்ந்தனர். அங்கு புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷிய அதிபர் புதினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    முன்னதாக, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதியின் பல்வேறு இடங்களிலும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், ரஷியா இனி இருக்காது என்றும், உக்ரைனுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் காணப்பட்டது. இந்தப் போஸ்டரால் அலாஸ்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
    • டிரம்பும், புதினும் சந்தித்து பேச இருப்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நேட்டோ எனப்படும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சி செய்தது. இதில் உக்ரைன் சேர்ந்தால் தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து என கருதிய ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்தது.

    3 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பினர் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் புதினுடன் அதிபர் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்திப்புக்கு பிறகு டிரம்பை சந்திக்க புதின் ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் அதிபர் டிரம்ப், அதிபர் புதினை நேருக்கு நேர் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின்போது உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர புதினுக்கு டிரம்ப் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரி விதிப்பை காரணம் காட்டி அவர் புதினுக்கு அழுத்தம் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் ரஷியாவுக்கு சொந்தமாக இருந்த அலாஸ்கா மாகாணத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஷியாவின் பழைய நகரில் டிரம்பும், புதினும் சந்தித்து பேசியது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீராங்கனையை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதுகிறார்.

    • ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்
    • இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் எச்சரித்துள்ளார்.

    உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

    ரஷிய அதிபர் புதின் இன்று அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியைச் சேர்ந்த நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் 6-7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்தார்.
    • அலெஸ்காவில் ரஷியா அதிபர் புதினுடன், அதிபர் டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் - ரஷியா இடையிலான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ரஷியா அதிபர் புதினுடன், அதிபர் டிரம்ப் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அதிபர் புதின் சமாதானம் செய்வார், அதிபர் ஜெலன்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன்.

    புதினுடனான இது ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை.

    நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். அதில் 100 சதவீதம் நேட்டோவால் செலுத்துகிறோம்.

    நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் 6-7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன, நாங்கள் அதைத் தீர்த்து வைத்தோம்.

    நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன்-ரஷியா போர் ஒருபோதும் நடந்திருக்காது என மீண்டும் தெரிவித்தார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 4வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வரேவ் 7-5 என கைப்பற்றினார். 2வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, கச்சனாவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதுகிறார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப்6-2, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூசியா பிரான்செட்டியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.
    • முயல்களுக்கு இடையில் மட்டுமே பரவுவது குறிப்பிடத்தக்கது

    அமெரிக்காவில் தலையில் 'கொம்புகள்' கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அமெரிக்காவின் ஃபோர்ட் காலின்ஸ் மற்றும் கொலராடோவின் பிற பகுதிகளில், தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு போன்ற பாகங்களை கொண்ட காட்டு முயல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலை ஷோப் பாப்பிலோமா (Shope papilloma) என்ற வைரஸால் ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் முயல்களில் மருக்கள் போன்ற கட்டிகள் உருவாகி கொம்புகளாக காட்சி அளிக்கும்.

    இந்த வைரஸ் பெரும்பாலும் தலை, காதுகள் மற்றும் கண் இமைகளைச் சுற்றி பாதிப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த வைரஸ் முயல்களுக்கு இடையில் மட்டுமே பரவுவது குறிப்பிடத்தக்கது

    • நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
    • பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று  எச்சரித்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதின் நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர்  புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பெசென்ட் அளித்த பேட்டியில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், வரி அதிகரிக்கப்படலாம்.

    ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் கட்ட வரிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    ×