என் மலர்
அமெரிக்கா
- இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும்.
தொழிலதிபர் எலான் மஸ்க் சிஇஓ ஆக உள்ள பிரபல வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்கள் எடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் நடப்பதுதான் அந்த வேலை. அதற்கு நாள் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 28,000 ரூபாய் சம்பளமாகவும் டெஸ்லா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு 5'7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாகனங்கள் தயாரிப்பதைத் தவிர்த்து அதிநவீன அறிவியல் சாதனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மனிதனைப் போன்ற ஹியூமனாய்ட் ஆப்டிமஸ் ரோபோக்களை டெல்சா தயாரித்து அதை மனிதர்கள் செய்யும் விஷயங்களைச் செய்யப் பழக்கி வருகிறது. அப்படி அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளைச் சொல்லித் தரவே இந்த வேலை.

இதன்படி அசைவுகளைப் பிரதியெடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது அந்த அசைவுகளை ரோபோவுக்கு கற்றுத் தர முடியும். டெஸ்லா நிறுவன தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் இந்த வேலைக்கு அப்ளிகேஷன்கள் குமிந்து வருகிறது.
- அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
- இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தீர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் நேற்று பென்சில்வேனியா மாகாணத்தில் நடத்த பிரச்சார கூட்டத்தில் பேசும்போது தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், 'சேவையாற்ற நான் விரும்புகிறேன்' [I am willing to serve] என்று பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் DOGE [Department of government efficiency] என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் மந்திரியாக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கிறார்.
- ஜனநாயக தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளரா பரிந்துரை செய்யப்பட இருக்கிறார்.
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த விழாவின் முடிவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார்.
ஹிலாரி கிளிண்டன் பேசும்போது கூறியதாவது:-
கமலா ஹாரிஸ்க்கு அமெரிக்காவை வழிநடத்திச் செல்லும் குணம், அனுபவம், பார்வை உள்ளது. அவருடைய இதயத்தையும் அவருடைய நேர்மையையும் நான் அறிவேன். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் இளம் வழக்கறிஞர்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக தொடங்கினோம்.
அத்தகைய வேலை உங்களை மாற்றும். அந்த குழந்தைகள் உங்களுடன் இருக்கட்டும். தான் பாதுகாத்த ஒவ்வொரு குழந்தை, அவள் உதவிய ஒவ்வொரு குடும்பம், சேவை செய்த ஒவ்வொரு சமூகத்தின் நம்பிக்கைகளையும் கமலா ஹாரிஸ் தன்னுடன் சுமந்து செல்கிறார்.
எனவே ஜனாதிபதியாக அவர் எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பார். கடின உழைப்பாளி குடும்பங்களுக்கு செலவுகளை குறைக்க போராடுவார். நல்ல ஊதியம் தரும் வேலைகளுக்கான கதவுகள் திறக்கப்படும். மேலும், அவர் நாடு முழுவதும் கருக்கலைப்பு உரிமைகளை மீட்டெடுப்பார்.
முன்னேற்றம் சாத்தியம் என்பதே என் வாழ்க்கையின் கதையும் நம் நாட்டின் வரலாறும். ஆனால் உத்தரவாதம் இல்லை. அதற்காக நாம் போராட வேண்டும். அதை ஒருபோதும், எப்போதும் கைவிடாதீர்கள்.
இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
2016 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஹிலாரி போட்டியிட்டார். இதில் ஹிலாரி கிளிண்டன் தோல்வியடைந்தார்.
- டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார்.
- 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளார்
அமேரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசி வரும் டொனல்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கம்யூனிச தலைவராக சித்தரிக்க முயன்று வருகிறார்.
இதற்கிடையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.
இந்த நிலையில்தான், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.
2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது
- இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
- நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'
அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை சாம்சனோவாவை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக். சபலென்காவை எதிர்கொள்கிறார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 3-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரூப்லெவ் உடன் மோதினார். இதில் சின்னர் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இன்று நள்ளிரவு நடைபெறும் அரையிறுதியில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், ஸ்வரேவை எதிர்கொள்கிறார்.
- நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல்.
- எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும்.
எக்ஸ் சமூக வலை தளத்தை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணர் கைது செய்யப்படுவார் என்று நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரேசிலில் உள்ள எக்ஸ் தள அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, பிரேசிலில் அலுவலகத்தை மூடுவதற்கான முடிவு கடினமானது. ஆனால் நீதிபதியின் ரகசிய தணிக்கை மற்றும் தனிப்பட்ட தகவல் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்தால், நாங்கள் விளக்கங்களை அளிக்க முடியாமல் போய் விடும் என்றார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து பிரேசிலில் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளது. அலுவலகம் மூடப்பட்டாலும் தொடர்ந்து எக்ஸ் வலைதள பக்கம் பிரேசிலில் செயல்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இனவெறி கருத்தை தெரிவித்தார்.
- கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இனவெறி கருத்தை தெரிவித்தார். கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரிய வில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன். "நான் அவரை விட நல்ல தோற்றமுடையவன். டைம் இதழின் அட்டையில் ஹாரிசின் விளக்கப்படம் எனக்கு அதிருப்தி அளித்தது.
நான் அவரை விட அழகாக இருக்கிறேன். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டீர்களா? அது ஒரு பைத்தியக்காரனின் சிரிப்பு. ஜோபைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் பப்லோ கேரினோ உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனை எதிர்கொள்ள இருந்தார். தாம்சன் காயம் காரணமாக விலகியதால் சின்னர் காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தும் விவாதத்தில் கமலா ஹாரிஸ்- டொனால்டு டிரம்ப் நேருக்குநேர் விவாதம்.
- 2020 தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான விவாதத்தில் கமலா ஹாரிஸை முறியடித்தவர் துளசி கபார்டு.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விலகியதால், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார்.
போட்டியிடும் வேட்பாளர்கள் தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்தும் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். அப்படி நடைபெற்ற முதல் விவாதத்தின்போது டொனால்டு டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் தினறியதால்தான் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி, கமலா ஹாரிஸை பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம்தேதி ஏபிசி செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விவாத நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்பும், கமலாவும் நேருக்குநேர் விவாதம் நடத்த உள்ளார்.
விவாதத்தில் கமலா ஹாரிஸை வீழ்த்த டொனால்டு டிரம்ப் திட்டம் வகுத்து வருகிறார். விவாதத்திற்கான பயிற்சி செசன் நடத்தப்படும். இதில் தனியார் கிளப் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் இந்து அமெரிக்கரான துளசி கபார்டு டொனால்டு டிரம்பின் பயிற்சி செசனில் இணைந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலின்போது நடந்த விவாதத்தில் கமலா ஹாரிஸை தோற்கடித்தவர், ஜனநாயக கட்சியை கபார்டு. ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் துளசி. ஹவாய் மாவட்டத்தின் அரசு பிரதிநிதியாக இருந்தவர். இவரும் கடந்த (2020) அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார்.
இதற்கென உட்கட்சி தேர்தல் 2019-ல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிஸ்க்கும் துளசிக்கும் விவாதம் நடந்தது. இதில் கமலாவை விட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார்.
பின்னர் துளசி ஜனநாயக கட்சியில் இருந்து 2022-ம் ஆண்டு வெளியேறினார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் அவரை தனது பயிற்சி செசனில் சேர்த்துள்ளார்.
டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையிலா் "அரசியல் வரலாற்றில் சிறந்த விவாதம் செய்பவர்களில் ஒருவராக டிரம்ப் நிரூபிக்கப்பட்டுள்ளார். இது ஜோ பைடன் உடனான விவாதம் மூலம் நிரூபணம் ஆனது. அவருக்கு பாரம்பரிய விவாததத்திற்கான தயார்படுத்துதல் (பயிற்சி) தேவையில்லை. ஆனால் 2020-ல் விவாத மேடையில் கமலா ஹாரிஸ்க்கு எதிராக வெற்றிகரமாக ஆதிக்கம் செலுத்திய துளசி கபார்டு போன்ற மரியாதைக்குரிய கொள்கை ஆலோசகர்கள் மற்றும் திறமையான தொடர்பாளர்களை சந்திப்பேன்" என்றார்.
2019-ம் ஆண்டு விவாதத்தின்போது துளசி "கமலா ஹாரிஸ் சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அட்டார்னியாக இருந்தபோது, 1500-க்கும் மேற்பட்டோரை கஞ்சா (marijuana) விவகாரத்தில் விதிமுறை மீறியதாக சிறையில் அடைத்தார். அதன்பின் அவரிடம் நீங்கள் எப்போதாவது கஞ்சா புகைத்தீர்களா? என்ற கேள்விக்கு சிரிப்பை வெளிப்படுத்தினார்" என குற்றம் சாட்டியிருந்தார்.
- மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 166 பேர் சுட்டுக்கொலை செய்தனர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சம்பவத்தின்போது சுட்டுக்கொலை செய்தனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பாகிஸ்தானில இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர்.
பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 கொலை செய்யப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ல் துாக்கிலிடப்பட்டான்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இதற்கிடையே ராணாவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் ஒப்பந்தம்படி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.






