என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதன் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.

    ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

    இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், முதல் சுற்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • டெஸ்லா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் அந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
    • எலான் மாஸ்க்கிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.

    டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

    இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்தார்.

    இன்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப். கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப். கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    அந்த ஒப்பந்தத்தின் படி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய டிரம்ப், கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.

    அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி காலிறுதியில் வென்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, ஈக்வடாரின் எஸ்கோபர்-கஜகஸ்தானின் நெடோவ்யெசோவ் ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

    அதிபர் தேர்தல் 

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

    பிரச்சாரக் களம்

    டிரம்ப் இன் பிரச்சாரம் ஜனநாயக கட்சியின் மாநாடு என அமெரிக்காவின் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிகாகோ மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கிய நிலையில் அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

    அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்து பேசினர். இந்நிலையில் மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

     புதிய பாதை 

    கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

     

    டிரம்பும் பைடனும் 

    டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அதிபராக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஜோ பைடனின் பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு அவர் செய்த பங்ங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும். அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தாய் சியாமளா 

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது தாய் சியாமளா கோபாலன் குறித்து உருக்கமாக பேசிய காமலா ஹாரிஸ், 19 வயதில் பெரிய கனவுகளுடன் தனது தாய் எப்படி கடல் கடல்கடந்து வந்தார் என்று தெரிவித்தார். மேலும் அவரை ஒவ்வொரு நாளும் தான் மிஸ் செய்வதாகவும் குறிப்பாக  இந்த சமயத்தில் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் கமலா கூறினார். தனது தாய் கடிமனா தைரியமான பெண் என்றும் தற்போது வானத்தில் இருந்து தன்னைப் பார்த்து புன்னைகைப்பார் என்றும் கமலா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    காசா போர் 

    காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார்  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றினார்.
    • பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப்-க்கு புல்லட் ப்ரூப் பாதுகாப்பு ஏற்பாடு.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு கரோலினாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப், பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென உரையை நிறுத்திவிட்டு தனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் பேசுவதால், அவரை சுற்றி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்தது. கண்ணாடி அரணில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தனது மைக்ரோபோனில் மெல்லிய குரலில் கேட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்ட மருத்துவ குழு அவருக்கு முதலுதவி செய்தது. பின்னர் ஆசுவாசப்பட்டவராக உணர்ந்த டிரம்ப் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றார்.

    தேர்தல் பரப்புரையின் போது துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர்பிழைத்த டிரம்ப், பொதுவெளியில் பேசும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, உரையை நிறுத்திய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. 

    • 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.
    • 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் வீரர்கள் சிக்கிக் கொள்ளலாம்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

    அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.

    இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.

    போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் என்பது 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலம் ஆகும். பின்பு அது தானாகவே பூமிக்கு திரும்பி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க இராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார்.

    பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதிசெய்ய ஸ்டார்லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.

    1. 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளலாம்.

    2. விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முயற்சி தோல்வியடையலாம்.

    3. விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம்

    என்று தெரிவித்தார்.

    • பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்.
    • 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும்.

    ஸ்டார்பக்ஸ் உலகின் பிரபல காபி நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் ஏற்கனவே இருந்து சிஇஓ-வை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது 50 வயதான பிரையன் நிக்கோலை புதிய சிஇஓ-வாக நியமித்துள்ளது.

    நிக்கோல் தினமும் 1,600 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ரெயிலில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய தேவையில்லை. இவருக்கென கார்ப்பரேட் ஜெட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த மாதத்தில் இருந்து புதிய சிஇஓ-வாக பதவி ஏற்க உள்ளார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். நிறுவனத்தின் தலைநகர் சியாட்டில் உள்ளது. கலிபோர்னியாவின் அவரது வீட்டில் இருந்து ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 1600 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவர் வேலை செய்வதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் வரை அவரது செயல்பாட்டை பொறுத்து போனஸ் பெற முடியும். 23 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருடாந்திர பங்கு பெறக்கூடிய தகுதியை பெறுவார்.

    பிரையன் நிக்கோல் வேலைக்காக நீண்ட தூரம் பயணிப்பது இது முதல் முறையல்லை. இதற்கு முன்னதாக சிபோட்டில் சிஇஓ-வாக இருக்கும்போதும் இதேபோன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சிபொட்டில் தலைமை அலுவலகம் கொலராடோவில் இருந்தது, நிக்கோல் 15 நிமிடத்தில் கார் மூலம் சென்றடைய முடியும். ஆனால், மெக்சிகன் பாஸ் புட் நிறுவனம் தலைமை அலுவலகத்தை கலிபோர்னியாவுக்கு அவரை நியமனம் செய்த மூன்று மாதத்திலேயே மாற்றியது.

    • ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.
    • டிரம்ப் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படும் ஜன நாயக கட்சியின் மாநாடு சிகாகோ நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று அதிபர் ஜோபைடன் பேசினார். இன்று மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது:-

    இக்கட்டான நேரத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு சிறந்த அதிபராக ஜோபைடனை இந்த நாடு நினைவில் கொள்ளும். அவரை ஜனாதிபதி என்று அழைப்பதோடு அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.

    நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அக்கறையுள்ள ஒரு அதிபர் நமக்கு தேவை. மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் சிறந்த ஊதியத்திற்கு பேரம் பேசும் ஒரு அதிபர் நமக்கு தேவை. அந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார். அது அவரால் முடியும். அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் தயாராகி விட்டார்.

    டிரம்ப் மற்றும் அவரது பணக்கார நன்கொடையாளர் உலகை இப்படி பார்க்க வில்லை. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது சக்தி வாய்ந்தவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்பதுதான். ஆனால் சுதந்திரம் பற்றிய பரந்த கருத்து நம்மிடம் உள்ளது.

    நாடு பிளவுப்படுத்த இருப்பதாக நாம் சிந்திக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். அவரை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்-மற்றவர்களுக்கும் பிளவு ஏற்பட விரும்புகிறார். இது அரசியலில் பழமையான தந்திரங்களில் ஒன்றாகும். அவரது செயல் மிகவும் பழுதடைந்துவிட்டது.

    இன்னும் 4 ஆண்டுகள் குழப்பம் நமக்கு தேவையில்லை. அதன் தொடர்ச்சி பொதுவாக மோசமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

    அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்துக்கு தயாராக உள்ளது. கமலா ஹாரிசுக்காக நாம் தயாராக இருக்கி றோம். அவர் இந்த பதவிக்கு தயாராக இருக்கிறார். டிரம்ப் அதிகாரத்தை தனது நோக்கங்களுக்கு ஒரு வழிமுறையாக பார்க்கிறார். அவர் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு நடுத்தர வர்க்கம் பணம் கொடுக்க விரும்புகிறார்.

    கமலா ஹாரிசிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் டிரம்ப் மோசமாக பேசி வருகிறார். நாம் நம்பும் அமெரிக்காவுக்காகப் போராடுவது நம் அனைவரின் கையில் இருக்கிறது.

    இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.

    • அமெரிக்காவின் பரிந்துரைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம்.
    • நாங்கள் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளதாக ஹமாஸ் குற்றச்சாட்டு.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் உள்ளது. காசா மக்களை பாதுகாப்பதற்கும், பிணைக்கைதிகளை மீட்பதற்கும் போர் நிறுத்தம் அவசியம் என இந்த மூன்று நாடுகள் கருதுகின்றன.

    இதனால் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை தயார் செய்தது. இந்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

    இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

    அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளது. இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் 9-வது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளார்.

    போர் நிறுத்தம் தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் "எங்களுடைய மெசேஜ் மிகவும் எளிமையானது. அது தெளிவானது. மிகவும் அவசரமானது. எங்களுக்கு தேவை போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போதுதான் இது எங்களுக்கு தேவை. நேரம் மிகவும் முக்கியமானது" என்றார்.

    நாங்கள் ஏற்றுக் கொண்ட முந்தை பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளிக்கவில்லை.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இதில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, உருகுவேயின் ஏரியல் பெஹர்-அர்ஜெண்டினாவின்ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 6-4, 5-7, 10-8 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் முதல் சுற்றில் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இதில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், குரோசியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதன்மூலம் சுமித் நாகல் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×