என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் டென்மார்க் வீரர் ரூனே தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.

    இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

    இதில் ரூனே 2-6, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்தின் அளவை உணர்த்தும்.
    • இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது

    விண்வெளி அறிவியலில் கோலோச்சும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவில் முதல் முறையாகக் கால்பதித்து முதல் விண்வெளி ரகசியங்களை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளிக்கொணரும் நாசாவில் விஞ்ஞானியாக, விண்வெளி வீரராக வேலை பார்ப்பது என்பது சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டது பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் விண்வெளி வீரர் வேலை என்பது மிகவும் துணிச்சல் மற்றும் கடின உழைப்பைப் கோரும் வேலையாக உள்ளது.

    கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை இந்தியர்களும் நாசாவில் முக்கிய பங்காற்றி உள்ளனர். பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

     

    இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கக் கூடும். அந்த வகையில் நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் [$152,258] சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு சுமார் 10 லட்சத்துக்கு 58 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாகக் கிடைக்கிறது. ரேங்க் படிநிலையை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மேலும்  இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    • பெற்றோர் வளர்த்து வந்த நாயை அவர் கொலை செய்துள்ளார்.
    • வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற்றோர் ரொனால்ட் கெர்ட்வில் (77) மற்றும் அன்டோனெட் கெர்ட்வில் (79) ஆகியோரை கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் வளர்த்து வந்த நாயையும் அவர் கொலை செய்துள்ளார். வீட்டில் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்தவரையும் தாக்கியுள்ளார்.

    அத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கிராபிக்ஸ் போட்டோவை உறவினருக்கு அனுப்பியுள்ளார். அவர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அதற்குள் வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார். அப்போது சாலையில் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

    அப்போது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய போலீசார் கேட்டுக்கொண்டனர். அப்போது ஜோசப் பிராண்டன் கெர்ட்வில், "நாங்கள் உங்களை விரும்புகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாகப் போகிறீர்கள்" என்றார். மேலும், "என்னை சுட்டு வீழ்த்தி விடுங்கள் எனக் கெஞ்சினார்". தொடர்ந்து சரணடைய மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை சுட்டனர்.

    காயம் அடைந்த நிலையில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் கை விலங்கு போட்டு கைது செய்தனர். காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது கூலாக பாட்டு பாடினார்.

    பின்னர் போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கெர்ட்வில் இப்போது இரண்டு கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது.
    • நிதி அளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு புதியவர்கள்

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 1 மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.


    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்காக கடந்த 1 மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

    இதில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு தேர்தல் நிதி அளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு புதியவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் போட்டி போட்டு நிதி அளித்துள்ளனர்.

    இதன் மூலம் கமலாஹாரிஸ் தனது பிரசாரத்தின் மூலம் பெரிய மற்றும் சிறிய நன்கொடையாளர்களை கவர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

    • உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • காம்ரேட் கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்'

    ரஷியா- உக்ரைன் போர், இஸ்ரேல்- பாலஸ்தீன போர் என்பது அந்தந்த நாடுகளுக்கிடையேயான போர் மட்டுமல்ல. உலக நாடுகள்,போரிடும் இரண்டு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டின் மூலம் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இஸ்ரேல் மற்றும் உக்ரைனுக்கு மேற்குலகம் ஆதரவு அளித்து வருவதுபோல், பாலஸ்தீனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளும், ரஷியாவுக்கு சீனா வட கொரியா ஆகியவை ஆதரவாக நிற்கின்றன.

    இந்நிலையில் இந்த போர்கள் மூன்றாம் போர் மூள்வதற்கான முன்னறிவிப்புகளாகவே உள்ளன என்று பலரும் பயத்தில் உள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகப் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது, உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் நடந்த லெபனான்-இஸ்ரேல் இடையேயான வான் வெளி தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக அமரிக்க வான் படைத் தளபதி CQ பிரவுனின் திடீர் மத்திய கிழக்கு பயணம் ஆகியவற்றை முன்வைத்து,

    'உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிசென்று கொண்டிருக்கிறது ஆனால் தூங்குமூஞ்சி [sleepy] ஜோ [பைடன்] கலிபோர்னியா பீச்சில் தூங்கிக்கொண்டு இருக்கிறார். ஜனநாயகவாதிகளால் [கட்சியால்]ஜோ புறக்கணிக்கப்பட்டுவிட்டார். காம்ரேட் [கம்யூனிஸ்ட்] கமலா ஹாரிஸ் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் சகாக்களுடன் பஸ்சில் டூர் சென்று கொண்டிருக்கிறார்' என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  

    • மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.
    • இதில் செக் வீராங்கனை நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெக்சிகோ:

    மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    • கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்

    சமூக ஊடகமாகவும் செய்தி பரிமாற்ற செயலியாகவும் விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும் பயங்கரவாத்துக்கு துணை நிற்பதாவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் இந்த கைது குறித்து மற்றொரு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மீம் [MEME] ஒன்றுக்கு லைக் போட்டால் கூட உங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாவெல் துரோவ் பிரான்சில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு எக்ஸ் தளத்தின் ஏஐ தொழில்நுட்பமான GORK அளித்த பதிவையும் பகிர்ந்துள்ளார். மேலும் பாவெலுக்கு 20 வருடன் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயனர் ஒருவரின் பதிவை பகிர்ந்து, 20 ஆண்டுகளா.. என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பாவெல் துரோவின் கைது குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. பெருமபாலான சமூக வலைத்தளங்களை மூலமும் தனி நபரோ குழுவோ சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது அவ்வப்போது வெளிச்சத்து வரும் நிலையில், டெலிகிராமை மட்டும் குறிவைப்பது, பாவெல் துரோவ் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுந்துள்ளது. மேலும் எக்ஸ் தலத்தில் பாவெல் துப்ரோவ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

    • அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தொழில்நுட்ப கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

     


    இதன் காரணமாக கடந்த 80 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளனர். இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி பூமிக்கு திரும்ப இருக்கிறது.

    சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா, புட்ச் இருவரும் பூமிக்கு திரும்புவது பற்றி கேள்விக்குறி இருந்து வந்த நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதன்படி இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

    வெறும் எட்டு நாட்கள் ஆய்வு பணிக்காக விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும் தற்போது எட்டு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா, புட்ச் இருவரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்கிறார்கள். 

    • அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
    • இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ-நாதனியல் லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடலில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும்.
    • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    அமரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் இந்த விற்பனையை அங்கீகரித்துள்ளார்

    இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 ஆகிய நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது. இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில்  இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மேலும் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார். பாலஸ்தீன போர், மேற்கு வங்காள விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.

    அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    ×