என் மலர்tooltip icon

    சீனா

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா பெகுலாவுடனும், கோகோ காப், பவுலினியுடனும் மோதுகின்றனர்.

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி காலிறுதியில் வென்றார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பவுலினி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆக்ரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதுகிறார்.

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சம்சோனோவா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பெர்க்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெற உள்ள அரையிறுதியில் ஜோகோவிச், மொனாக்கோவின் வேலண்டின் வச்ராட் உடன் மோதுகிறார்.

    • ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.
    • 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர்.

    சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார். அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதனையில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது;
    • நான்காவது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் முன்னணி வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கனடா வீரர் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-6 (8-6), 6-7 (1-7), 6-4 என்ற செட் கணக்கில் லேனரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்உடன் மோதுகிறார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ஜாமே முனார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் முனாரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் ஜோகோவிச், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க் உடன் மோதுகிறார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 3 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதனால் ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைச்சரிவுகளில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
    • இந்த மலைச்சரிவுகளில் வெளிநாட்டினர் மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீஜிங்:

    உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.

    இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு 3வது சுற்றில் காயம் ஏற்பட்டது.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் 2 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக கிரீக்ஸ்பூர் 2வது செட்டை 7-5 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் கிரீக்ஸ்பூர் 3-2 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சின்னருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிரீக்ஸ்பூ வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நடப்பு சாம்பியனான சின்னர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×