என் மலர்
சீனா
- அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
- கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியது.
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவையை சீன நிறுவனம் தொடங்குகிறது.
அதன்படி, ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று முதல் தொடங்குகிறது.
- அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
- அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ், சோளம் போன்ற விவசாய பொருட்களையும், கச்சா எண்ணெயையும் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
அதே சமயம் அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முக்கிய வர்த்தகப் பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்த நிலையில், சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது.
- இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கத்தால் பலர் உடல் பருமனால் அவதிக்குள்ளாகினர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதனால் பலரும் ஜிம்-மை நோக்கி படையெடுக்கின்றனர். இதன் காரணமாக தற்போது வீதிக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் திறக்கப்படுகிறது.
அவ்வாறு உடற்பயிற்சி கூடத்தை நோக்கி வருபவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை ஜிம் நிர்வாகத்தினர் அறிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஜிம் நிர்வாகம் அறிவித்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்துள்ளது.
அதாவது, 3 மாதங்களில் 50 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள Porsche காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஜிம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சவாலில் பங்கேற்க அனுமதி கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உணவு, தங்கும் வசதிகளை ஜிம் நிர்வாகமே அளிக்கிறது. இதனால் பலரும் அந்த உடற்பயிற்சி கூடத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.
இதனிடையே, இதுபோன்று எடைக்குறைப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
உடற் பயிற்சி கூடத்திற்கு சென்றால் உடல் எடை குறைக்கலாம், உடல் நலம் காக்கலாம் என்று பலரும் நினைக்கையில் இது போன்ற அறிவிப்பு லாப நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டது என்று இணையதள வாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்டது.
- தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளனர்.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென் சீனக் கடலில் 30 நிமிட இடைவெளியில் நேற்று விபத்துக்குள்ளாகின.
விபத்துக்குள்ளான எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டரின் மூன்று பணியாளர்களும், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் இரண்டு விமானிகளும் விபத்துக்கு முன் பாதுகாப்பாக வெளியேறினர்.
இரண்டு விபத்துகளுக்கான காரணங்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் விமானம் அங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
இராணுவப் பயிற்சியின் போது விபத்து நடந்ததாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சூழலில் தென் சீனக் கடலில் அமெரிக்க ராணுவ விமானமும் ஹெலிகாப்டரும் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை வெற்றி பெற்றார்.
பீஜிங்:
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2-வது செட்டை ரிபாகினா 6-0 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து 3-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி ரிபாகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
- சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறுவதில்லை.
- 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை இளைய தலைமுறையினர் தவிர்க்கத் தொடங்கியுள்ளது அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், திருமணம் மற்றும் குழந்தை பெறுதலில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசுகள் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு நேர்மாறாக மக்கள்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் பெண்கள் மத்தியில் புதிய கலாசாரம் ஒன்று வேகமெடுத்து வருகிறது.
அங்குள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர குடும்பப் பெண்கள், வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' என்று அழைக்கப்படும் ஆண்களைப் வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.
'கென்ஸ்' என்றால் என்ன? என்ற தலைப்பில் இதுதொடர்பான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், 'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக இது உருவாகியுள்ளது.
இந்த ஆண்கள் சமையல், சுத்தம் செய்தல், வீட்டு வேலைகள், ஷாப்பிங் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும் இருக்கிறார்கள்
உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்டவர்களே கென்ஸ்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள். மேலும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
இந்தக் கலாசாரம் தலைதூக்க முக்கிய காரணம், வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய உறவில் இருக்கும் எந்தவொரு கட்டாயமான பொறுப்புக்கும் கட்டுப்பட விரும்புவதில்லை என்பதுதான்.
இதற்கு உதாரணமாக, 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காணொளி 4.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை ஈர்த்து வருகிறது.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இதில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார்.
இதில் வசெரோட் முதல் செட்டை இழந்தாலும், 2 மற்றும் 3வது செட்டைக் கைப்பற்றினார்.
இறுதியில் வசெரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- நவம்பர் முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
- அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.
சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு 145 சதவீத வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 110 சதவீத வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகள் இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டது.
பின்னர் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்ததால் சீனா மீதான வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார்.
சீனா தனது அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுபாடுகளை விதித்ததையடுத்து அதிருப்தி அடைந்த டிரம்ப், மீண்டும் சீனா மீது கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறியதாவது:-
அதிக வரிகள் விதிப்பு என்ற அச்சுறுத்தல்கள் சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. வர்த்தகப் போரில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. நாங்கள் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் இரட்டை தரநிலைகளுக்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
கடந்த மாதம் முதல் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது தவறான நடைமுறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அமெரிக்கா தவறான வழியில் செல்ல வலியுறுத்தினால், சீனா நிச்சயமாக அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்து உள்ளது.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா அரையிறுதியில் வென்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சபலென்கா 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-2) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதியில் வென்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் மொனாக்கோவின் வேலண்டினிடம் தோல்வி அடைந்தார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோவின் வேலண்டின் உடன் மோதுகிறார்.






