என் மலர்
சீனா
- ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
- வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்தார்.
புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.
நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது.
"வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம்," என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுகிறது. இதுதவிர கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது. ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
- நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம்.
- நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாங்ஐகுன் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார்.
மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.
இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பியோவோ கூறுகையில், இந்த கலசம் என்னுடையது. நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம். நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.
- சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது.
- இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.
சீனாவில் உள்ள சுற்றுலாதளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது. இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.
ஆனால், அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.
- இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
- சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர்.
சீனா உலகிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள முதல் நாடாக உள்ளது.
தற்போது சீனாவில் உள்ள 14 மில்லியன் மக்கள் தொகையில் 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். வருகிற 2035-ம் ஆண்டு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல சில்வர் ரெயில் என்ற பிரத்யேக சுற்றுலா ரெயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.
சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர். அவர்களுக்காக இந்த புதிய ரெயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் முதியவர்கள் மூலம் 30 ட்ரில்லியன் யுவான் வளர்ச்சி இலக்கை அடைய நிர்ணயித்து உள்ளனர்.
- சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம்.
- பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.
குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்றால் அவர்களை பெற்றோர் கண்டிப்பது இயல்பு. இவ்வாறு ஒரு தந்தை தனது மகனை திட்டியதால் ஆவேசமடைந்த சிறுவன் தந்தையை போலீசில் சிக்க வைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் சந்திர புத்தாண்டையொட்டி தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட பணத்தை எனது தந்தை திருடி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்சு மாகாண பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசில் புகார் அளித்துள்ளான். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் சிறுவன் சரியாக படிக்கவில்லை என்பதால் அவனை தந்தை கண்டித்ததும், அந்த ஆத்திரத்தில் அவரை போலீசில் சிக்க வைத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறினர். உனது பணத்தை தந்தை பத்திரமாக வைத்திருப்பார். உனக்கு பணம் தேவைப்படும் போது அந்த செலவுகளை அவர் செய்வார் என அறிவுரை வழங்கினர்.
- புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
- விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
சீனாவில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தற்போது அங்கு ஷான்டான் மாகாணத்தில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல தோற்றமளிக்கும் வகையில் மாற்றி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் இவ்வாறு கழுதைகள் மீது ஓவியங்கள் வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடும் பனிப்பொழிவு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் இவ்வாறு வர்ணம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.
புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். சில பயனர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது.
- நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்:
விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சீனா, நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. இதற்கான முயற்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
2030-ம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனித வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலவுக்கு செல்லும் மனிதன் அணியும் உடையை சீன விண்வெளி மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உடைக்கு வாங் யு என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நிலவில் மனிதன் அமர்ந்து செல்லும் வாகனமும் (ரோவர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு டான்சுவோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் 9 ஆயிரம் பேரிடம் கருத்துகள் பெற்று சூட்டப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலைவனத்தில் நிலவை போன்ற தன்மையை செயற்கையாக உருவாக்கி அங்கு இவ்வாகனம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது விண்வெளி உடை மற்றும் ரோவரின் முன்மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன, மேலும் ஆராய்ச்சி பணிகள் சீராக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சீன விண்வெளி மையத்தின் ஆராய்ச்சியாளரான ஜாங் வான்ஸ் கூறும்போது, நிலவில் தரையிறங்கும் விண்வெளி உடைகள் கச்சிதமாகவும், இலகுவாகவும் இருக்கும். நிலவின் மேற்பரப்பில் கடுமையான சூழலைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்றார்.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் ராக்கெட்டும் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜ் பால் மிட்டாய் போலவே இருக்கும்.
- பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டுள்ளார்.
பீஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் வு என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவர் பால் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார்.
ஷுவாங் பாவோ என அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங் பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும்.
ஒருநாள் அவரது உறவினர் பட்டாசைக் கொண்டு வந்து வீட்டில் வைத்துள்ளார். அதை வூ மிட்டாய் என நினைத்துச் சாப்பிட்டுள்ளார்.
ஸ்மாஷ் பட்டாசு என பொருள்படும் ஷுவாங் பாவோ நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும். இது சீன நாட்டில் பிரபலமாக உள்ளது. பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின்போது பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பால் சாக்லேட் என நினைத்து வூ வெடியை பல்லைப் பயன்படுத்தி கடித்தபோது வெடித்தது. இதனால் அந்தப் பெண்ணின் வாயில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் வீட்டின் ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாக்கெட் ஒன்று இருந்தது. அது பார்ப்பதற்கு சிறுவயதில் நான் ரசித்த டாரோ பால் மிட்டாய்போல இருந்தது. எனவே அதில் ஒன்றை எடுத்து வாயில் வைத்தபோது அது திடீரென வெடித்தது என தெரிவித்தார்.
- தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையும் ஒருபோதும் கேட்டதில்லை.
- சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் அடைகின்றன. குறிப்பாக டீப்சீக் ஏஐ குறித்து அச்சம் கொண்டுள்ளன.
இதனால் அமெரிக்க பாராளுமன்ற ஊழியர்கள் கணினி மற்றும் செல்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என பாராளுமன்ற அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய நிதித்துறை அமைச்சகம் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடைசெய்துள்ளன.
இந்த நிலையில் டீப்சீக் செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"சட்டங்களுக்கு எதிராக தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ ஒருபோதும் கேட்டதில்லை, ஒருபோதும் கேட்க மாட்டோம்.
தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தவோ அல்லது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை அரசியலாக்கவோ எடுக்கும் நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்" என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
- சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது.
- சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இதனிடையே டீப் சீக் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. லியாங் வென்ஃபெங் என்று ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அப்புகைப்படம் டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் புகைப்படம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
சீன கட்டுமான பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் லியாங் வென்ஃபெங் புகைப்படத்தை டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ. என தவறாக பரப்பியுள்ளனர்.
டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் பெயரும் லியாங் வென்ஃபெங் என்று இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். டீப் சீக் ஏஐ வெளிவரும் வரை லியாங் வென்ஃபெங் தனது ப்ரோபைலில் தன்னை பற்றிய போதுமான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. டீப் சீக் ஏஐ வெளிவந்தவுடன் இது தொடர்பாக கடந்த வாரம் அவர் பேசியபோது தான் பலருக்கும் அவரை பற்றி தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான்- சீனா எப்போதும் நட்பு நாடுகளாக இருக்கும். எந்த காலத்திலும் நட்பு நாடுகளாக இருக்கும்.
- உலகில் எத்தனை பயங்கரவாதங்கள், எத்தனை பிரச்சனைகள் எழுந்தாலும் பாகிஸ்தான் மக்கள் சீன மக்களுடன் நிற்பார்கள்.
பாகிஸ்தான்- சீனா இடையிலான நட்பை பயங்கரவாத தாக்குதலால் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆசிஃப் அலி சர்தாரி கூறுகையில் "பாகிஸ்தான்- சீனா எப்போதும் நட்பு நாடுகளாக இருக்கும். எந்த காலத்திலும் நட்பு நாடுகளாக இருக்கும். உலகில் எத்தனை பயங்கரவாதங்கள், எத்தனை பிரச்சனைகள் எழுந்தாலும் நான் நிற்பேன், பாகிஸ்தான் மக்கள் சீன மக்களுடன் நிற்பார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்பில் ஏற்றம் இறக்கும் இருக்கும். ஆனால், இது பயங்கரவாத தாக்குதல்களால் உடையாது" என்றார்.
4 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பல ஊழியர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சீனாவைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஆசிஃப் அலி சர்தாரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் அளவிலான போக்குவரத்து கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளில் சீனா ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
- கேக்கை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார்.
- அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
காதலர்கள் தங்கள் துணையின் மனம் கவர்வதற்காக வித்தியாசமான வழிகளை கையாள்வார்கள். அந்த வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கேக் ஒன்றை தயாரித்து அதற்குள் தங்க மோதிரம் ஒன்றையும் வைத்துள்ளார். பின்னர் காதலியை வீட்டிற்கு வரவழைத்து கேக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
பின்னர் சுதாரித்து கொண்டு அதை வெளியே எடுத்து பார்த்த போது தான், தனது காதலர் இன்ப அதிர்ச்சியாக கேக்கில் மோதிரத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனால் அவரது காதல் முன்மொழிவு நிகழ்ச்சி கலகலப்பாக இருந்ததாக கூறி வாலிபர் இந்த சம்பவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அது வைரலாக பரவியது.






