என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • ஷான்டோ இரு இன்னிங்சிலும் சதம் விளாசினார்
    • 662 என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் ஆப்கானிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் குவித்தது. ஷான்டோ 146 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணியின் நிஜத் மசூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 146 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணியின் எபாடொத் ஹொசனை் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    236 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷான்டோ 2-வது இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு வீரர் மொமினுல் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் சேர்த்தார்.

    ஒட்டுமொத்தமாக வங்காளதேச அணி 661 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும்.

    கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்கை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 115 சுருண்டது. இதனால் 546 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்கில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இரு இன்னிங்சிலும் சதம் அடித்த ஷான்டோ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    • வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் வங்காளதேசம் அணி 5 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 79 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது.

    நஜ்முல் உசைன் ஷான்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். மமுதுல் ஹசன் ஜாய் 76 ரன்னில் அவுட்டானார்.

    முதல் நாள் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்னுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

    • மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    டாக்கா:

    தென்கிழக்கு வங்ககடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக மாறியது. நேற்று பிற்பகல் மியான்மர் சிட்வே நகரம் மற்றும் வங்க தேசம் காக்ஸ்பஜார் இடையே மேக்கா புயல் கரையை கடந்தது.

    இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் ஏராளமான மரங்கள் வேராடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ரோடுகளில் ஆறு போல வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆறுகளில் கரையே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் வீட்டின் மேற்கூரைகளிலும் கட்டிடங்களின் மேல் மாடியிலும் தஞ்சம் புகுந்தனர்.

    சூறாவளி புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மரங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ் பார்மர்கள் சாய்ந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவைகள் அனைத்தும் முடங்கியது. மியான்மர் கிழக்கு சான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி கணவன்- மனைவி பரிதாபமாக இறந்தனர்.

    பியான்யோலாவின் நகரத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார்.

    இந்த புயலுக்கு 700-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மோக்கா புயலால் கடலோரபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேற்கு மியான்மர் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கரையோரம் இருந்த குடிசைபகுதிக்குள் நீர் புகுந்தது. இதில் ஆயிரம் மக்கள் சிக்கி கொண்டனர். மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவர்களை மீட்டனர். கடல் நீர் புகுந்ததால் குடிசைகள் அனைத்தும் சேதம் அடைந்தது.

    வங்காளதேசம் காக்ஸ் பஜார் பகுதியில் உலகில் மிகப்பெரிய அளவிலான அகதிகள் முகாம் உள்ளது. ,இங்கு மூங்கில்களில் ஆன 1300 குடில்கள் உள்ளது. இதில் 3 லட்சம் மக்கள் தங்கி இருந்தனர். அவர்கள் புயல் தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று வங்கதேசத்தை புரட்டி போட்ட புயலுக்கு இந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த குடில்களும் தப்பவில்லை. இந்த குடில்கள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்தது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த பணியில் மீட்பு குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, மற்றும் குடிநீர், மருத்துவ உதவிகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் இறந்தவர்கள் பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    • வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது.
    • இதனால் வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

    டாக்கா:

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னதாக மோக்கா புயல் காரணமாக இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்

    • சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சமடைந்தனர்.

    வங்காளதேசம், டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் ராணுவப் பிரிவான குக்கி- சின் தேசிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    சம்பவ இடத்தில் இருந்து குண்டுகள் துளைத்த உடல்கள் பந்தர்பன் ஜிலா சதார் மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன என்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரோவாங்ச்சாரி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அப்துல் மன்னன் கூறினார்.

    வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

    துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பலர் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது.

    வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது.

    விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுது்து சம்பவ இடத்திற்கு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது. மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர்.

    மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
    • இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது.

    முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் லித்தன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். நஜ்முல் உசைன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டேவிட் மலன் 53 ரன்களும், கேப்டன் பட்லர் 40 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக நஜ்முல் உசைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    டாக்கா:

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

    இறுதியில், வங்காளதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேச அணி 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    சட்டோகிராம்:

    இங்கிலாந்து அணி வங்காளதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 67 ரன்னும், பில் சால்ட்டு 38 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசினார். ரோனி தலுக்தர் 21 ரன்னும், லிட்டன் தாஸ் 12 ரன்னும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அருகில் உள்ள வங்கியின் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 246 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 196 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சட்டோகிராம்:

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.5 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷகிப் அல் ஹசன் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் வங்காளதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.

    வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இப்போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    ×