என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டி20 தொடரை வங்கதேசம் வென்ற நிலையில் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி
- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
- இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 4-0 என வங்காளதேச அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக முகமதுல்லா 54 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானியும் பிரையன் பென்னட்டும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் மற்றும் தடிவானாஷே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில், தடிவானாஷே மருமணி 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ஜோடி சேர்ந்த பிரையன் பென்னட்டும் சிக்கந்தர் ராசாவும் வங்கதேச பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்து பிரையன் பென்னட் அவுட் ஆனார். சிக்கந்தர் ராசா 76 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என வங்கதேசம் கைப்பற்றியிருந்த நிலையில், 5வது டி20யில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.






