என் மலர்
உலகம்
- இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்.
- சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல்.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறை, ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத் துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது என்றும், இந்தியாவுக்கு ஆதரவாக உள்ள ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காள தேசத்தின் தேசியவாத கட்சியை (பி.என்.பி.) ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.என்.பி. கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
- பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு சென்றடைந்தார். விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு அதிபர் கட்டோனிவேர் மற்றும் பிரதமர் சிதிவேன் ரபுகாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டது.

இதனிடையே, பிஜியின் அதிபர் கட்டோனிவேர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் திரவுபதி முர்வுமுக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சிவிலியன்' விருதை வழங்கினர்.
பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜி பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
- ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
- குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வங்காளதேச தேசிய கட்சி செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கான பொறுப்பை ராணுவம் ஏற்கும் என தெரிவித்தார்.
இந்தசூழலில் ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அங்கு தனது மகளை சந்தித்த பின் ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, அரசியலுக்கு இனி மீண்டும் திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'வங்காள தேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4-ம் தேதியில் இருந்தே பதவி விலகுவது குறித்து ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். இருப்பினும் நாட்டை விட்டு வெளியேற அவர் தயக்கம் காட்டினார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்காளதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் தற்போது ஆசியாவில் எழுச்சி பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக கடினமாக உழைத்த தனக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் எழுந்ததால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார்" என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறினார்.
- இத்தொடரில் உள்ள முக்கியமான பெண் கதாப்பாத்திரத்தின் பெயர் கலீஸி.
- இந்த பெயரை வைத்த ஒரே காரணத்தினால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டது.
உலகம் முழுக்க அறியப்படும் பிரபலமான தொலைகாட்சி தொடர் கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones). இந்த தொடர் 2011 ஆம் ஆண்டு முதல் HBO தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பானது. இத்தொடரில் வரும் கதாப்பாத்திரங்கள் மிகவும் நேர்த்தியாக எழுதபட்டிருக்கும்.
இத்தொடரில் உள்ள முக்கியமான பெண் கதாப்பாத்திரத்தின் பெயர் கலீஸி. இந்த பெயரை வைத்த ஒரே காரணத்தினால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லண்டனை சேர்ந்த லூசி அவரது 6 வயது குழந்தையுடன் பாரீஸில் உள்ள டிஸ்னி லேண்டில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் அவர்களது சுற்றுலா கனவை கேள்விக்குறியாக்கும் வகையில் இருந்தது.
கலீஸி என்ற பெயர் இருப்பதன் காரணத்தால் உங்கள் மகளின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது. இதை கேட்ட லூசி மிகவும் அதிர்ச்சியடைந்தார்.
கேம் ஆஃப் திரோன்ஸ் அவர்களது பொருட்களுக்கும், கதைக்கும், மட்டுமே உரிமையுற்றவர்கள் ஆவர். கதாப்பாத்திரத்தின் பெயர்களுக்கு அவர்கள் உரிமை கோரவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு லூசி பதில் அளித்தார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் அந்த வெப் தொடரின் உரிமையாளரான வார்னர் ப்ரோஸிடம் இருந்து கலீஸி என்ற பெயரை உபயோகிக்கலாம் என்ற அனுமதி கடிதத்தை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த பதில் லூசியை மிகவும் எரிச்சல் அடைய செய்தது. இதனால் இந்த பிரச்சனையை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதில், "என் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை பெறும் போது வராத பிரச்சனை இப்போது ஏன்? இது பிரச்சன்னை ஆகும் என்றால் அப்போதே சான்றிதழ் தர மறுத்திருக்கலாமே" என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
லூசியின் பதிவு வைரல் ஆனதை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட பாஸ்பார்ட் அலுவலக அதிகாரி, தங்கள் செயலுக்கு வருந்துகிறோம் என்றும் கலீசியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
- அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
- ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன
பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

- கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
- மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
- ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறினார்.
- இந்தியா வந்துள்ள அவர் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் இன்று ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் புகுந்தனர். இதற்கு முன்னதாக ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்தார்.
ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.
இதற்கிடையே வங்காளதேச சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.
- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
- இதையடுத்து வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாலும், சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஷேக் ஹசீனா லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- 1975-ம் ஆண்டு புரட்சியில் ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்பே 2 முறை ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ராணுவம் காப்பாற்றிய அந்த சமயத்தில் 2 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் அதிபராக இருந்தபோது, 1975 ஆம் ஆண்டு நடந்த முதல் ராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்டார்.
அந்த புரட்சியின் போது ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். அந்தப் புரட்சியின் போது மொத்தமாக ஷேக் ஹசீனாவின் மொத்த குடும்பமே படுகொலை செய்யப்பட்டது.
1981-ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜியாவுர் ரஹ்மான் ராணுவத்தினராலேயே படுகொலை செய்யப்பட்டார். அதே சமயம் பல முறை ராணுவத்தின் புரட்சி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ஏற்ற இரண்டே மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலக்கம் செய்தனர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் அந்த கலகத்தை ராணுவம் அடக்கியது. கடந்த 2012-ம் ஆண்டும் ஹசீனாவுக்கு எதிராக ராணுவம் புரட்சி நடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டம் நடந்து வருகிறது.
- இதனால் அங்கு காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாக்கா:
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டம் காரணமாக நேற்று காலவரையற்ற நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபரப்பு சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார் என தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
- கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
- இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம்.
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இடையில் மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்நாட்டில் பரபர சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மற்றும் டாக்காவை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவர் என்று தெரிகிறது.
இதன் காரணமாக மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால், வங்காளதேசத்தில் நாடு முழுக்க இணைய சேவைகளை முடக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய சேவைகள் முடங்கியதால் பேரணி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது.
முன்னதாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில், பங்கேற்ற வங்காளதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்துவிட்ட போதிலும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
- தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் மீது கொடிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி7 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இஸ்ரேலை சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி நேதன்யாகு கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கல்லாட் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு படை தலைவர் ஹெர்ஸி ஹலேவி மற்றும் இஸ்ரேலின் முன்னணி உளவு அமைப்புகளான மொசாத் மற்றும் ஷின் பெட் ஆகியவற்றின் தலைவர்களான டேவிட் பர்னி மற்றும் ரோனென் பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 30 ஆம் தேதி ஹிஜ்புல்லா மூத்த தலைவர் ஃபௌத் சகரை (Faud Shukr) இஸ்ரேல் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான், ஹிஜ்புல்லா இடையே பதற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஜ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டுவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.






