பெண்ணின் தலையில் இருந்த பேன்கள்... கூச்சலிட்ட பயணிகள்... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
Flight emergency landing
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com