என் மலர்
உலகம்
- ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
- குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ்டை பிரதமர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் அறிவித்தார்.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக டிம் வால்ஸ் (60) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து, ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.
பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.
ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் உடைக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையின் தலை மீது ஏறி போராட்டக்காரர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இறுதியில் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
- போராட்டக்காரர்கள் அரசு சொத்துகளை தீவைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.
- அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரின் சர்வதேச ஹோட்டலை தீ வைத்து எரித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தை ஷேக் ஹசீனா பக்கம் திருப்பினர்.
போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியுள்ளார்.
இடைக்கால அரசு அமைப்பதாக வங்காளதேசம் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடி வருகின்றனர். பல இடங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு தீவைத்துள்ளனர்.
அந்த வகையில் ஜோஷோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான ஹோட்டலுக்கு தீவைத்து கொளுத்தினர். இந்த தீ விபத்தில் ஹோட்டலுக்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. சபீர் சர்வதேச ஹோட்டல் அவாமி லீக் கட்சியின் பொது செயலாளர் ஷஹின் சக்லாதாருக்கு சொந்தமானதாகும்.
போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகிறார்கள்.
- வங்காளதேச வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக தகவல்.
- ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்து அரசு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் வேலைவாய்ப்பில் தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்த பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வன்முறையில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத்துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காளதேசத்தின் தேசியவாத கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்திடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம் நிலவி வரும் வன்முறை தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதுவரை இல்லாத வன்முறை மற்றும் உயிரழப்புகள் வங்காளதேசத்தில் இரண்டு வாரங்களில் நடைபெற்றுள்ளன. ராணுவத் தளபதியால் ஒரு இடைக்கால அரசு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.
வன்முறைறை முடிவுக்கு கொண்டு வர, மீண்டும் அமைதி திரும்ப, மேலும் உயிரிழப்பை தவிர்க்க அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்.
இங்கிலாந்து- வங்காளதேசம் மக்களிடையே ஆழமான தொடர்பு உள்ளது. காமன்வெல்த் மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா லண்டனிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் லண்டம் இது தொடர்பாக அதிகார்ப்பூர்வ பதில் ஏதும் அளிக்கவில்லை.
ஷேக் ஹசீனாவின் தங்கை மகள் (niece) துலிப் சித்திக் (இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ள ஷேக் ரெஹானாவின் மகள்) ஹம்ப்ஸ்டீட் என்ற வடக்கு லண்டனில் இருந்து பகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருவூல துறையின் ஜூனியர் மந்திரியாக உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா கடைசியாக லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார்.
- ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
டாக்கா:
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வங்காளதேச பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது.
மேலும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
- இங்கிலாந்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
- போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என அறிவுறுத்தல்
இங்கிலாந்தில் 3 இளம்பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வந்ததிகளால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் போது கவனமாக இருக்கும்படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பேராசிரியரான முகமது யூனுஸ் 2006ல் உலக புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
- முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக நோபர் பரிசு வென்ற முகமது யூனுஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள தேசத்தின் சிட்டகாங் பல்கலைக்கழக (Chittagong University) பேராசிரியரான முகமது யூனுஸ் (Muhammad Yunus) 2006ல் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசை வென்றார்.
1976ல் வறுமையில் வாழ்பவர்களிடம் ஈடாக எதையும் கோராமல் சிறு தொகைகளை கடனாக வழங்கும் கிராமின் வங்கி (Grameen Bank) எனும் பொருளாதார சித்தாந்தத்திற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக அவருக்கு இந்தாண்டு தொடக்கத்தில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலீதா ஜியாவுக்கு 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டாக்காவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் உள்ளார்.
- லண்டனில் தற்காலிகமாக குடியேற அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.
இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மெர் பிரதமராக உள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து "அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் சென்றடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் அதை செய்ய வேண்டும். தேவைப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி இங்கிலாந்து பெருமைக்குரிய சாதனைப் படைத்துள்ளது. எனினும் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் கேட்கும் அல்லது இடைக்கால தஞ்சம் அடைவதற்கான வசதி இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றார். அப்போது தனக்கு பிடித்த சலுபா உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
அப்போது அவர் கூர்மையான ஒன்றை கடித்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே தான் சாப்பிட்ட உணவை வெளியே எடுத்து பார்த்த போது அதில் மூக்கு வளையம் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நடந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவரின் இந்த பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன.
- புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளிலும் பனிப்பாறைகள் இழந்து வருகின்றன. இந்நிலையில் இதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக டங்கன் போர்ட்டர் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், 15 வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பெண்ணுடன் சுவிட்சர்லாந்தில் உள்ள ரோன் பனிப்பாறையின் முன்பு நின்று கொண்டு எடுத்த புகைப்படம் உள்ளது.
அதில், பனிப்பாறைகள் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தன. 2-வது புகைப்படத்தில் அவர் தற்போது அதே பனிப்பாறையின் முன்பு நின்று எடுத்த புகைப்படம் உள்ளது. அதில் பனிப்பாறை பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது.
- கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகி ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகத்தையை உற்று நோக்க வைத்துள்ள இச்சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி, ஷேக் ஹசீனாவுக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கணித்து இருந்தார். அந்த வகையில், ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே, ஷேக் ஹசீனாவை மே மற்றும் ஆகஸ்ட் 2024 மாதங்களுக்கிடையே கவனமாக இருக்குமாறு எச்சரித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர், கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா சிக்கலில் இருப்பார். மே, ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2024-இல் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அதே பதிவை மீண்டும் டேக் செய்த கினி, "ஆகஸ்ட் 2024-இல் ஷேக் ஹசீனாவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கணித்திருந்தேன்," என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
- கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது.
- தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.






