என் மலர்
நீங்கள் தேடியது "Lice"
- கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
- மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
- சிறுமியின் தலையில் பேன்கள் அதிகமாக காணப்பட்டது. அதனால் தான் தலையில் அரிப்பு ஏற்பட்டது.
- ஒரு கட்டத்தில் சிறுமியின் தலையில் பேன்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே தலையில் பல இடங்களில் காயம் உருவாகி தொற்று ஏற்பட்டது.
அமெரிக்காவில் பேன்கள் கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்து வந்தார். அந்த சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் சான்ட்ரா தனது காதலருடன் வேறு வீட்டில் வசித்தார். இதனால் அந்த சிறுமி தனது பாட்டி எலிசபெத்துடன் வசித்து வந்தார். ஆனால் பாட்டி எலிசபெத் தனது பேத்தியை சரியாக கவனிக்கவில்லை.
இதனால் சிறுமியின் தலையில் பேன்கள் அதிகமாக காணப்பட்டது. அதனால் தான் தலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. ஆனால் சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைத்து வைத்தனர். ஒரு கட்டத்தில் சிறுமியின் தலையில் பேன்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே தலையில் பல இடங்களில் காயம் உருவாகி தொற்று ஏற்பட்டது.
சில நாட்களில் அந்த தொற்று முகத்துக்கும் பரவியது. இதனால் அவரது முகம் வீங்கியது. சிறுமி ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் இருந்த பேன்களால் தொற்று ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் சான்ட்ரா, பாட்டி எலிசபெத் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.






