என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.
மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
- நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல திரைப்படத்தில் நடித்தார்
- இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.
நந்தா கிஷோர் எமானி இயக்கத்தில், நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன விஷயம் இல்ல திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த மிகுந்த தாக்கமுள்ள குடும்பக் கதையாகும். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT-இல் ஸ்ட்ரீமாகிறது!
ஒரு நடுத்தர குடும்பத்து இளம் தாய் தனது மகன் படிப்பில் திணறுகையில், அவனை பாஸ் மார்க்கான 35 மதிப்பெண்களைப் பெற வைக்க முயற்சிக்கிறாள். இது வீட்டின் இயல்பான வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அந்த குடும்பம் சந்திக்கும் சவால்களும், அதைத் தீர்க்க அவர்கள் போராடுவதும், வெகு சுவாரஸ்யமான திரைக்கதையால் சொல்லப்பட்டுள்ளது. எளிய நடுத்தர வர்க்கம் தங்கள் வாழ்க்கையைத் திரையில் பார்க்கும்படி ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமாவாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகை நிவேதா தாமஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் பிரியதர்ஷி, விஸ்வதேவ் ரச்சகொண்டா, கௌதமி, பாக்யராஜ், கிருஷ்ண தேஜா, அருண் தேவ், அபய், அனன்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக T C பிரசன்னா பணியாற்றியுள்ளார். பிரின்சி வைத் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை லதா நாயுடு செய்துள்ளார்.
"35 சின்ன விஷயம் இல்ல" திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது.
- கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆம் ஆதமி மாநிலங்களவை எம்.பியாக இருந்த ஸ்வாதி மாலிவால் கடந்த வருடம் மே மாதம் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து கெஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது யமுனை நதி மாசுபாட்டைக் கண்டித்து கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீசால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி பாஜகவிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம் 27 ஆண்டுகள் கழித்து பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகாலமாக தக்க வைத்த ஆட்சியை கைநழுவ விட்டுள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மாவிடம் தோற்றார்.
இந்நிலையில் மகாபாரத கதையில் திரௌபதியை அவமதிக்க, கௌவர்கள் அவரை துகில் உரியும் சித்திரத்தை ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த ஸ்வாதி மாலிவால், பெண்ணுக்கு ஏதாவது தவறு நடந்தால், அதைச் செய்தவர்களை கடவுள் தண்டித்திருக்கிறார். நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் தெருக்களின் நிலை போன்ற பிரச்சினைகளால்தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இழந்தார்.
அவர்கள் (ஆம் ஆத்மி) பொய் சொல்ல முடியும் என்றும் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் சொல்வதைச் செய்ய வேண்டும், ஆனால் ஆம் ஆத்மி தலைமை அதை மறந்துவிட்டு, அவர்கள் முன்பு சொன்னதுக்கு மாறாக செயல்படுகிறது. பாஜகவை நான் வாழ்த்துகிறேன். மக்கள் நம்பிக்கையுடன் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதை நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
- இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து இருந்தார். தமிழில் திரு. மாணிக்கம் மற்றும் ராஜா கிளி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.
திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது திட்டமிட்ட தேதியிற்கு முன்னரே திரைப்படத்தை வெளியிட முடுவு செய்துள்ளனர். அதன்படி ராமம் ராகவம் திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை போஸ்டர் வெலியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 48, ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மேலும், புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார்.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை.
அதனால்தான், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
- Bad Girl திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
- Bad Girl படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் தேர்வு செய்யபட்டது. தற்பொழுது ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றுள்ளது. இதனை நெட்வொர்க் ஃபார் தி ப்ரோமோஷன் ஆஃப் ஏஷியன் சினிமா என அழைக்கின்றனர். பெரும்பாலான இந்த விருது அறிமுக இயக்குனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தேர்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படம் இந்த விருதை வாங்குவது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அங்கீகாரம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான்.
- ஆனால் டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்றது. சுமார் 48 இடங்களை கைப்பற்றி 27 வருடத்திற்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
கடந்த இரண்டு தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. 2015-ல் 67 இடங்களிலும், 2020-ல் 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். முதலமைச்சராக இருக்கும் அதிஷி பெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தல் முடிவு குறித்து அதிஷி கூறியதாவது:-
எங்களுடன் உறுதியாக நின்ற டெல்லி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பாஜக-வின் சர்வாதிகாரம் மற்றும் குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகிவற்றிற்கு எதிரான போர் தொடரும். தேர்தல் முடிவு ஆம் ஆத்மிக்கு பின்னடைவுதான். ஆனால், டெல்லி மற்றும் நாட்டுக்கு மக்களுக்கான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்.
என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. என்னுடைய அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு எங்களுடைய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். என்னுடைய தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. இது போராட்டத்திற்கான நேரம். பாஜக-வின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
அதிஷ் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் விதுரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிட்டனர்.
- லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாகச் சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார். இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது எலான் மஸ்க் அதிபரா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதைப் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ஏகபோக அதிகாரங்களை மஸ்க் பெற்றிருந்தாலும் தனது அனுமதி இன்றி மஸ்க் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்க அரசில் மஸ்க்கின் பிடி இறுகிக்கொண்டே வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபர் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருக்கிறார். மேலும் வாஷிங்க்டன் (தலைநகர்) மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் வைரலான நிலையில் இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். ஆதாவது, டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது என்று கேலியாக கூறியுள்ளார்.
- டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும்.
- டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை பெற்றது.
மதியம் 2.45 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஏறக்குறைய இதுதான் இறுதி முடிவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஒன்றிரண்டு இடங்களில் மாற்றம் ஏற்படலாம்.
இதனால் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தலைநகர் மாநிலமான டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் பிரதமர் மோடி வெற்றி குறித்து கூறியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த டெல்லி சகோதர மற்றும் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன். இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவும் பெருமையும் அடைகிறோம். டெல்லி மாநிலத்தின் அனைத்து துறையின் வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்யும். டெல்லி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். இது எங்களுடைய வாக்குறுதி. இதை நிறைவெற்றும் வரை ஓயமாட்டோம். விக்சித் பாரத்தில் டெல்லியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜக-வினர் மேலும் தீவிரமாக உழைத்து டெல்லி மக்களுக்கான சேவை செய்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார்
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 21.27 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- 27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
- பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 47, ஆம் ஆத்மி கட்சி 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலாவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜங்புராவில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவினர். ஆம் ஆத்மிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
27 வருடங்களுக்கு பிறகு பாஜக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைகிறது. இதனால் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர் பர்வேஷ் சர்மா முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஆம் ஆத்மி பின்தங்கிய போதிலும் ஆம் ஆத்மி தலைமையகத்தின் வெளியே அக்கட்சியின் தொண்டர்கள் நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வெற்றி உறுதியானதும் பாஜக அலுவலகத்தில் களைக்கட்டிய கொண்டாட்டங்களின் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.
- தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
- 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இந்நிலையில், ஓடும் ரெயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.






