என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், "ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்தி நமக்கு எந்த விதத்தில் நமக்கு பயன் தரும். இந்திய கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை. நான் அசாமில் இருந்தபோது 3 மாதத்தில் இந்தி கற்றுக்கொண்டேன்.
மூன்றாவதாக எதாவது ஒரு மொழி என்று பிதற்றுகிறார்கள். அதெல்லாம் பொய். இதில் ஏமாந்தோம் என்றால் பள்ளிகளில் இந்தி, சம்ஸ்கிருத ஆசிரியர்கள் மட்டும் தான் இருப்பார்கள்.
பள்ளியில் 50 மாணவர்கள் வெவ்வேறு மொழி தேர்ந்தெடுத்தால் எப்படி அதற்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடைமுறை சாத்தியமற்றது. இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே செருப்புப் போடுவேன் என மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். ஜென்மத்திற்கும் நீங்கள் செருப்பு அணிய மாட்டீர்கள். செருப்புப் போட வாய்ப்பு அமையாது
- உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- கும்பமேளாவிற்கு 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கும்பமேளா நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
- இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
- வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "இது திமிர் பிடித்தவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம். வரியை திருப்பிக் கேட்டால் அற்பத்தனம் என்கிறார் மத்திய அமைச்சர்.
மத்திய அமைச்சரின் பெயர் தர்மேந்திரா, ஆனால் எந்த தர்மமும் இல்லாதவர். ஆனால் இந்திய ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்க முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார். இதை கேட்ட தமிழ்நாட்டு மக்கள் உங்கள் அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிறார்கள்.
எங்களின் உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். யாசகம் கெடக்கவில்லை. மும்மொழியை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கொடுக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது?
1965 இல் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக இங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் பலர் உயிரிழந்தார்கள். அப்போது ரெயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்களில் இருந்த இந்தி அழிக்கப்பட்டது.
இதனையடுத்தது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படாது என்று அப்போதைய பிரதமர் நேரு உறுதி அளித்தார். இப்போது மோடி மன்னர் போல இருக்கிறார். அவர்களின் பாசிஸ்ட்ட ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை இருமொழி கொள்கை காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். உண்மையில் அண்ணாமலை தான் காலாவதி ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள்.
- தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தமிழ்நாடே கொந்தளித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள். எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு பயப்படமாட்டோம். அஞ்சமாட்டோம். அடிபணியமாட்டோம். தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே மேடையில் கூடியிருக்கின்றோம்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த திட்டமுல் இல்லை. தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட் உரையில் இல்லை. பெஞ்சல் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசு கஜானாவில் இருந்த ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தற்போது இந்தியை ஏற்காததால் கல்வித்துறைக்கு வழங்கக்கூடிய 2,190 கோடி ரூபாயை உத்தர பிரதேசம், குஜராத்தில் மாநிலத்திற்கு பிரித்து கொடுத்துள்ளது.
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதியை தர முடியும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டியிருக்கிறார்.
நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை. நாங்கள் ஒன்னும் உங்களிடம் பிச்சையோ கடனோ கேட்கவில்லை. தமிழக மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப்பணித்தின் உரிமையைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு தர வேண்டிய நிதி உரிமையை தாருங்கள் என உரிமையோடு கேட்கிறோம்.
தமிழ்நாடு அரசையும் சரி, தமிழ்நாட்டு மக்களையம் சரி ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இது திராவிட மண், பெரியார் மண். சுயமரியாதை மண். இதை ஒன்றிய அரசுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள். தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
- ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள்.
- என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை...
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வேல்முருகன் பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரேயொரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
அது,
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம்.
எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் எனச்சொன்னார். இதை சரியான களமாக மாற்றுங்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்.
அனைத்து சுங்கச்சாவடிகளில் உங்க தலைமையிலான தொண்டர்களும், மக்களும் வரிக்கொடா இயக்கத்தை அறிவியுங்கள். அனைத்து தலைவர்கள் சுங்கச்சாவடிகளில் சுங்கம் தர மறுப்போம் என வரிக்கொடா இயக்கத்தை தொடங்குவார்கள்.
2-வது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டியில் ஒத்துழைப்பு தரமாட்டோம். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது என அறிவியுங்கள். அதானியின் துறைமுகங்களுக்கு துணை நிற்கமாட்மோம் என சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தரமாட்டோம். எனச் சொல்லுங்கள். மோடி உங்களுடைய காலடியில் மண்டியிடுகிறாரா? இல்லையா? என்பதை நான் பார்க்கிறேன் என்பதுதான்.
தமிழனின் மான உணர்ச்சி, இன உணர்ச்சி, சுயமரியாதையில், தன்மானத்தில் கை வைத்துக்கொண்டே இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்பதால் எவ்வளவோ பணிந்து போகிறீர்கள். எவ்வளவோ தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறோம். ஒன்றிற்கும் மரியாதை கிடையாது. கிழித்து குப்பையில் வீசுகிறார்கள்.
பாரளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள்., மோடி அரசு, சங்கபரிவார் கும்பல்கள் நாட்டிற்கு செய்யும் அட்டூழியங்களை பாராளுமன்றத்தில் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.
தமிழக வரலாற்றிலேயே கலைஞருக்குப் பிறகு தளபதி தலைமையில் உள்ள 40 எம்.பி.க்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கக் கூடியவர்கள். நம்ம ஆட்கள் கேட்கும் கேள்விகள் ஒன்றிற்கு கூட சங்கி கும்பலால் பதில் சொல்ல முடியவில்லை.
நிர்மலா சீதாராமன் கதறுகிறார். அவருக்கு கோபம்தான் வருகிறது. தயிர் சாதம் சாப்பிடுகிற உனக்கே கோபம் வருகிறது என்றால்?, நல்லி எழும்பு சாம்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?.
என் மண்ணுக்கும் என் மக்களுக்கும் செய்கின்ற துரோகம்.. ஒக்கி புயல் வந்தால் பணம் இல்லை... வர்தா புயல் வந்தால் பணம் இல்லை... தானே புயல் வந்தால் பணம் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பணம் இல்லை... குரங்கணி தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர் கேட்டால், 6 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டருக்கு கண் தெரியாது என்றகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் என்னத்திற்கு ஹெலிகாப்டர்.
நான் அதிகமாக பேசினா.. தளபதி சட்டமன்றத்தில் அழைத்து ஏன் இப்படி பேசினிங்க என கேட்பார். அதனால் ஆத்திரம் பொங்குது... கோபம் வருது... நாளைக்கு என்எல்சி-யில் வைக்கிறேன் கச்சேரி.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.
- 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
- குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகை கீர்த்தி பாண்டியன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
- கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார்.
நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - இயக்குநர் கோகுல் - நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், '' அஃகேனம் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு , பாண்டிச்சேரி தவிர்த்து வட இந்தியாவிலுள்ள சில முக்கியமான பகுதிகளிலும் நடைபெற்றது. இப்படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் தேசிய அளவில் விருது பெற்ற ஓடிஸி நடன மேதை திரு. கங்காதர் நாயக் மற்றும் அவரது குழுவினருடன் ஏராளமான வட இந்திய நாட்டிய கலைஞர்களும் இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார்கள். 'அஃகேனம்' திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனிடையே அருண்பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் இதற்கு முன் 'அன்பிற்கினியாள்' எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது என்பதும், மீண்டும் இருவரும் ' அஃகேனம்' எனும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 18 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் வழங்குவதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன் பெறுவர்.
மானாவாரி பயிர் ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள்.
- தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "1986 க்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு.. நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.
தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
தமிழக பாஜக தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில் ACER அறிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். அந்த ACER அறிக்கை பாஜகவின் ஒரு அஜெண்டா தான்.
உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது. இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று எக்ட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் அப்டேட்டை இந்த மாத இறுதியில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பட விநியோகிஸ்தரான ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் " கொஞ்சம் நாள் பொரு தலைவா , குட் நியூஸ் ஆன் தி வே மாமே" என பதிவிட்டுள்ளார்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பந்து வீச்சில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நாக்பூர்:
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே களமிறங்கினர். இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ரத்தோட் (54), ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9, சித்தேஷ் லாட் 35, ரகானே 18 என வெளியேறினார். இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும் தனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு நிதி தர மறுக்கிறது.
- ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை.
மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மும்மொழி கொள்கை மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு நிதி விடுவிக்காதது குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-
இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே இருமொழி கொள்கை செயல்படுத்துகிற அரசு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். பிஎம்ஸ்ரீ பள்ளியை நாங்கள் திறக்க முடியாது என்பதை வைத்துக் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் உள் எஸ்எஸ்ஏ நிதியை நிறுத்திவைப்பது பிளாக்மெயில் நடவடிக்கை. அச்சுறுத்தும் நடவடிக்கை. இதை இந்திய அரசு கைவிட வேண்டும். நிதியை தர வைப்போம். தர வைப்பதற்கான வகையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு கூறினார்.
மேலும் கண்டன பொதுக்கூட்டத்தில் "தமிழ்நாடு மீண்டும் ஒரு மொழிப்போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று மத்திய பாஜக அரசை எச்சரிக்கிற அறப்போராட்டம்தான் இது" என்றார்.






