என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.
    • அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய் My Friend, My Brother என பேசத் தொடங்கிய விஜய் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையை தொடங்கிய விஜய்,

    * தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வரலாறு படைக்கும்.

    * அரசியல் என்றால் வேற வெலல் தான். அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றாக நாம் பார்க்கலாம்.

    * அரசியலில் யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.

    * அரசியலில் மட்டும் தான் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    * மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போன ஒருவன் அரசியலுக்கு வந்தால், ஒரு சிலபேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும்.

    * இதுவரை நாம் சொன்ன பொய்யையெல்லாம் நம்பி மக்கள் ஓட்டுபோட்டனரே, இவனை எப்படி நாம் Close பண்ணலாம் என நினைப்பர்.

    * குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா என தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள்.

    * வருகின்ற எதிர்ப்பை எல்லாம் Left Handல் டீல் செய்து த.வெ.க. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

    * கட்சியை பலப்படுத்தும் பணியை செய்து வருகிறோம்.

    * வேரையும் விழுதுகளையும் பலப்படுத்தும் வேலையை தான் நாம் செய்து வருகிறோம்.

    * அண்ணா கட்சி ஆரம்பித்த போது பின்னால் நின்றவர்கள் இளைஞர்கள்.

    * நமது கட்சி எளிய மக்களுக்கான கட்சி, பண்ணையார்களுக்கான கட்சி அல்ல.

    * தவெக பண்ணையாளர்களுக்கான கட்சி அல்ல. சாதாரண மக்களுக்கான கட்சி. அதனால் இங்கு சாதாரண மக்கள் இருப்பர்.

    * பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே முதல் வேலை.

    இவ்வாறு விஜய் பேசினார். 

    • தனது எக்ஸ் பக்கத்தில் பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
    • எங்கும் சிவனே! என்று பதிவிட்டுள்ளார்.

    சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் இந்நாளில் சிவனுக்கும், குல தெய்வ கோவில்களிலும் பூஜைகள் நடைபெறும்.

    இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பூஜை செய்யும் வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

    போலேநாத் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித பண்டிகையான மகாசிவராத்திரியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    இந்த தெய்வீக சந்தர்ப்பம் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருவதாகவும், மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதியை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். எங்கும் சிவனே! என்று பதிவிட்டுள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதவில், அனைவருக்கும் புனிதமான மகாசிவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்!. சிவசக்தியின் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்கட்டும். எங்கும் சிவன்! என்று தெரிவித்துள்ளார். 

    • தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.

    த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:-

    * த.வெ.க.விற்கு வியூகம் அமைக்க போவதில்லை. இது மாற்றத்திற்கான காலம்.

    * எனது வியூகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சகோதரரும் நண்பருமான விஜய்க்கு தேவையில்லை.

    * த.வெ.க. அரசியல் கட்சி அல்ல. பல லட்சம் பேர் இணைந்த இயக்கம்.

    * விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

    * தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    * தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக இளைஞர்கள் உள்ளனர். உங்கள் பணியே உங்கள் வெற்றி.

    * தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் தேர்தலுக்கு பின்னர் வியூகவகப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.

    * தமிழை கற்கவும், தமிழை பேசவும் அனைத்து முயற்சியும் எடுப்பேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சி மாடல் இந்தியாவின் சிறந்த மாடல்.

    * தமிழகத்தின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

    * அடுத்த வருடம் த.வெ.க. வென்ற பின்னர் உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள்.

    * தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கு நன்றி சொல்ல தமிழகம் வரும்போது தமிழில் பேசுவேன்.

    * வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணில் உள்ளது போல் அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது.

    * லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் சிறந்ததாக இருக்கும்.

    * மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அரசியல் ஊழல் அதிகமாக உள்ளது.

    * தமிழக மக்கள் மத அரசியலை வேரூன்ற விடமாட்டார்கள் என நம்புகிறேன்.

    * சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தால், தோனி, சச்சினின் ஆட்டம் எப்படி மக்களுக்கு தெரியவரும் என்றார். 

    • 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை.
    • திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் அரசு, மக்களுக்கான அரசு.

    சென்னை:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் உயிர் காக்கும் சேவை பணிக்கு ஆணை வழங்க என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும்.

    மருத்துவர்கள் செய்ய கூடியது, மக்களின் உயிர் காக்கும் பணி. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது.

    திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் அரசு, மக்களுக்கான அரசு. எத்தனை தடைகள் வந்தாலும், எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் மக்களுக்கான பணியை திராவிட மாடல் அரசு மேற்கொள்கிறது. சட்ட நெருக்கடிக்கு பிறகுதான் பணி ஆணைகளை வழங்கியுள்ளோம். 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புதான். மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என இப்படி கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்பால் இன்று தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
    • ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

    * பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது என்னை அழைத்தவர் விஜய்.

    * சினிமாவின் உச்சத்தில் இருந்த போது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய்.

    * சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டுள்ளனர்.

    * பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் உள்ளது.

    * 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    * 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றம் செய்தார்கள்?

    * தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    * ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும்.

    * 15 வருடங்களாக 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள கட்சி அதிமுக.

    * வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தின் கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர்.

    * சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற போலி கபடதாரிகள்.

    * தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று த.வெ.க., ஒரே மாற்று தலைவர் விஜய்.

    * தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்று பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜய்.

    * ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? என்பது பற்றிய எண்ணம் தான் உள்ளது.

    * சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளது.

    * சிறை செல்வதற்கும் த.வெ.க.வினர் தயாராக உள்ளனர்.

    * ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

    * எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், நல்ல தலைவர்கள்கள் இருக்கிறார்கள்.

    * விஜயை பார்த்து நடிகர் என்று கூறுகின்றனர், ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    * நம் கொள்கைகளை உள்வாக்கி மேலும் பல தலைவர்கள் வர தயாராக உள்ளனர். பல பூகம்பங்கள் தயாராக உள்ளது என்றார். 

    • கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
    • தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.

    த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார். மேடை ஏறியதும் 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.

    கையெழுத்து இயக்கத்தில் முதல் ஆளாக அதன் தலைவர் விஜய் கையெழுத்திட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்பட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டனர். அப்போது மேடையில் இருந்த பிரசாந்த் கிஷோரையும் கையெழுத்திட த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.

    அப்போது, "இல்லை, இல்லை வேண்டாம்" என்றவாரு செய்கையில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர் கடைசி வரை கையெழுத்திடாமல் நழுவி கொண்டார். த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கையெழுத்து இயக்கத்திற்காக அரங்கத்தின் மேடையில் வைக்கப்பட்ட பேனரில், "புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் தணிப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் ஆகியற்றுக்கு எதிராக போராட உறுதியேற்போம்," என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநரான சதிஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிஸ்' என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார்.
    • இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    பிரபல தொலைக்காட்சி சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் திரைப்படங்களில் தீவிரமாக களமிறங்கிய கவினுக்கு லிஃப்ட், டாடா ஆகியவை வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

    அடுத்து வெளியான ஸ்டார் படம் சற்று சொதப்பினாலும் பிச்சைக்காரனாக கவின் நடித்த ப்ளடி பெக்கர் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நடன இயக்குநரான சதிஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிஸ்' என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கவினின் 6 - வது திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

     

    நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று (பிப்ரவரி 26) காலை 10.30 மணிக்கு படக்குழு அறிவித்தபடி வெளியிட்டுள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனி என்னுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • களம் இனிமேல் தான் சூடுபிடிக்கப்போகிறது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி இலக்கை அடைவது தொடர்பான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதன்பின், கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனிடையே, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் இன்று த.வெ.க.வில் இணைய விழா நடைபெறும் அரங்கத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா நாச்சியார், இனி என்னுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மொழிக்கு நாம் எதிரி கிடையாது. ஆனா இந்தி தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நிலைமை வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

    இனி தமிழக வெற்றிக்கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக்களமாகப் போகிறது. அதனை தமிழகம், தமிழ்நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள். எதிர்காலம் சிறப்பாக உள்ளது. களம் இனிமேல் தான் சூடுபிடிக்கப்போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக விஜய் எந்த எல்லைக்கும் நிற்பார். அவருக்கு உறுதுணையா, பெண்களுக்கான ஒரு குரலா நானும் இருக்கனும் என்று நினைத்து தான் த.வெ.க.வில் இணைகிறேன் என்றார். 

    • முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
    • பக்திப் பாடலுடன் பியூஷனாக உருவாகியுள்ளது.

    இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.

    முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'கிஸ்சா 47' அறிவித்தபடி இன்று (பிப்ரவரி 26) காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. பக்திப் பாடலுடன் பியூஷனாக உருவாகியுள்ள இந்த பாடல் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது.
    • கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தமிழ்தாய் வாழ்த்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழா மேடையில் த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீற்றிருந்தனர்.

    விழா நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து த.வெ.க. கொள்கை பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி இலக்கை அடைவது தொடர்பான உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதன்பின், கொள்கைத் தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தளபதி விஜய் பயிலகத்தில் பயிலும் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து உரை நிகழ்த்தினர்.

    • பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
    • சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் பங்குக்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தொடங்கிய அவர் 2018 இல் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கில் 2023 இல் கைதானார். கடந்த மாதம் பாக். நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இலிருந்து வெளியேறியபின் இம்ரான் கான் சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    தங்களது சந்திப்பு குறித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் சிறையில் அந்த ஆட்டத்தை பார்த்தார்.

    முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என்று இம்ரான் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் விமர்சித்து  கேள்வி எழுப்பியதாக அலிமா கூறினார். 

     

    • இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை.
    • பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

    இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்வுகளை நடத்துவதற்கு 'எளிய தெலுங்கு' பாடப் புத்தகமான 'வெண்ணெலா'வைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். 'எளிய தெலுங்கு' பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×