என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது.
- ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், "கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் அமைந்துள்ளது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மற்ற மாநிலங்கள் மீது நடத்தப்படும் அரசியல் தாக்குதல். இது வடக்கு - தெற்கு இடையேயான போர் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம். மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது"
- இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
- எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 'இட்லி கடை' ஏப்ரல் 10-ந்தேதி வெளியாகவதில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்னும் 10 முதல் 20சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் போன்ற நடிகர்கள் ஒரே காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால், அவர்களின் நேரத்தை ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதால், அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விரும்புகிறோம். இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. புதிய வெளியீட்டுத் தேதியை 10 நாட்களுக்குள் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 28-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 28-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
- அடுத்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நீங்களும் உங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
- கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் பேசியதாவது:-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது. இதனால் தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். இந்த நடவடிக்கை மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ? அங்கெல்லாம் அதனை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த 14-ந்தேதி தீ விபத்தின்போது ஒரு அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலாகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிராவோ, "கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.
இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.
- இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
- இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணிக்கும் புறநகர் ரெயில் சேவைகள் உள்ளது. இதைத்தவிர கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இந்த புறநகர் ரெயில்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் இந்த குளு, குளு ஏ.சி ரெயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவிக்க இருக்கிறது.
மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல நாள் முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படாது. காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.
இந்த ரெயிலை பொறுத்தவரை கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.
இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. பயணிகள் மத்தியில் குளு, குளு ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயும் ஏ.சி. ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.
- தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநில முதல்-மந்திரிகள், ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் 7 மாநிலங்களை சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்களுடன் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது.
* தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும்.
- சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், CSK vs MI போட்டியானது ஐபிஎல்-இல் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார்.
- நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
- பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சி பாதித்திருக்கும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது.
* பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார்.
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
- பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
* தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா?
* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும்.
* பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
* பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாக குற்றம்சாட்டினார்.






