கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்...

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 28-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்...
Published on

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகிற 28-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் சென்னையில் மதிய வேளையில் 35 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com