என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
    • கேரி ஸ்டீட்டின் வழிகாட்டுதலில் 2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து மகுடம் சூடியது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டீட் 2018-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார். இடையில், இரண்டு முறை அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதில் வெள்ளைநிற பந்து போட்டிக்கான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) பயிற்சியாளர் பணியில் இருந்து மட்டும் விலகுவதாக ஸ்டீட் நேற்று அறிவித்தார்.

    டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிப்பது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் வெவ்வேறு பயிற்சியாளரை நியமிப்பது குறித்து நியூசிலாந்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடும்.

    53 வயதான கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் இந்த ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

    2021-ம் ஆண்டில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது அவரது வழிகாட்டுதலில் முத்தாய்ப்பான வெற்றிகளாக அமைந்தன.

    • குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல பார்மில் உள்ளனர்.
    • ‘சுழல் மன்னன்’ ரஷித் கானின் பந்து வீச்சு இதுவரை எடுபடவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து எளிதில் வீழ்த்தியது. குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு நல்ல பார்மில் உள்ளனர்.

    இவர்களின் நிலையான ஆட்டம் தான் குஜராத்தை வீறுநடை போட வைக்கிறது. பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் கலக்குகிறார்கள். 'சுழல் மன்னன்' ரஷித் கானின் பந்து வீச்சு இதுவரை எடுபடவில்லை. அவரும் மிரட்டினால் பந்து வீச்சு மேலும் வலுவடையும்.

    ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் உதை வாங்கியது. அடுத்து தொடர்ச்சியாக சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா, ஹசரங்காவும் பலம் சேர்க்கிறார்கள்.

    ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ராஜஸ்தானுக்கு எதிரான தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்கும் வேட்கையில் உள்ள குஜராத் அணிக்கு உள்ளூர் சூழல் சற்று அனுகூலமாக இருக்கும்.

    • பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.
    • சென்னை அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

    இந்த வெற்றிக்கு பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ்டர் பட விஜய் புகைப்படத்தை பகிர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது.

    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்களும், துபே 42 ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 27 ரன்களில் வெளியேறினார். விஜய் சங்கர் 2 ரன்னும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. இதனைதொடர்ந்து 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி  ஐபிஎல் தொடரில் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

    • கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய போது 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
    • கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

    கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தனது கைகளில் எழுதியதால் தான அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுறேன் என்ன பண்றாங்கனு பார்க்கலாம் என்பது போல இருந்துச்சு அவரது செயல் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    • ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
    • சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 9, ஸ்டோய்னிஸ் 4, நெகல் வேதேரா 9, மேக்ஸ்வெல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

    ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக அரை சதம் கடந்தார். அந்த சமயத்தில் பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ருத்ர தாண்டவம் ஆடிய ஆர்யா 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். அவர் 42 பந்தில் 103 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்செனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் 52 ரன்களிலும் யான்சென் 34 ரன்களிலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார்.
    • அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 39 பந்தில் சதம் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் அடித்த வீரர்களில் பிரியான்ஷ் ஆர்யா 5-வது இடத்தில் உள்ளார். மேலும் அன்கேப்டு வீரர்களில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் 8-வது வீரராக ஆர்யா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல்லில் வேகமான சதம் (எதிர்கொண்ட பந்துகள் மூலம்)

    30 - கிறிஸ் கெய்ல் (RCB) vs பி.டபிள்யூ.ஐ, பெங்களூரு, 2013

    37 - யூசுப் பதான் (RR) vs மும்பை, மும்பை பிஎஸ், 2010

    38 - டேவிட் மில்லர் (KXIP) vs ஆர்சிபி, மொஹாலி, 2013

    39 - டிராவிஸ் ஹெட் (SRH) vs ஆர்சிபி, பெங்களூரு, 2024

    39 - பிரியான்ஷ் ஆர்யா (PBKS) vs சிஎஸ்கே, முல்லாப்பூர், 2025*

    ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரர்களின் சதம்:-

    ஷான் மார்ஷ் vs RR, 2008

    மணீஷ் பாண்டே vs DEC, 2009

    பால் வால்தாட்டி (KXIP) vs CSK, 2009

    தேவ்தத் படிக்கல் (RCB) vs RR, 2021

    ரஜத் படிதார் (RCB) vs LSG, 2022

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) vs MI, 2022

    பிரப்சிம்ரன் சிங் vs (DC), 2023

    பிரியான்ஷ் ஆர்யா (பிபிகேஎஸ்) எதிராக சிஎஸ்கே, 2025*

    • ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இந்த தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் இடம் பெற்றுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் அறிமுகமாகி உள்ளார்.

    வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் புய்யான் அன்கான், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், சையத் காலித் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்

    போட்டி அட்டவணை விவரம்:

    முதல் டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 20-24 - சில்ஹெட்

    2வது டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 28 - மே 02 - சட்டோகிராம்

    • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
    • நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அரை சதம் கடந்து 48 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடி 36 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். மார்க்ரம் 47 ரன்கள் எடுத்தார்.

    கொல்கத்தா அணி சார்பில் ஹர்சித் ராணா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேப்டன் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்னில் அவுட்டானார். சுனில் நரைன் 30 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் போராடிய ரிங்கு சிங் 15 பந்தில் 38 ரன்க எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணியும் எந்த வித மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.

    • மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதே போல் கொல்கத்தா, சென்னையை ஆர்சிபி வீழ்த்தியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ரஜத் படிதார் ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்த ஒரு கேப்டனும் இதுவரை செய்யாத ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது. இது டி20 லீக் வரலாற்றில் வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனையாகும்.

    ஒரே ஐபிஎல் சீசனில் ஈடன் கார்டனில் KKR-யும், சேப்பாக்கத்தில் CSK-யும், வான்கடேயில் MI-யும் வீழ்த்திய அணிகள் இரண்டுதான். ஒன்று பஞ்சாப் மற்றொன்று ஆர்சிபி ஆகும்.

     

    பஞ்சாப் கிங்ஸ் 2012-ல் அவ்வாறு செய்தது. ஆனால் அந்த வெற்றிகள் வெவ்வேறு கேப்டன்களின் கீழ் வந்தன. ஆடம் கில்கிறிஸ்டின் தலைமையில் ஈடன் கார்டனில் KKR அணியை வீழ்த்திய PBKS, பின்னர் டேவிட் ஹஸ்ஸி தலைமையில் MI மற்றும் CSK அணிகளை வீழ்த்தியது.

    எனவே ஒரே சீசனில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பட்டிதார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடியவர்.
    • கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேதர் ஜாதவ். இவர் இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு வகையில் சிறப்பாக விளையாடியவர்.

    இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி வந்தார். கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடிவர். கேப்டன் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ப்ளேயராக இருந்தார். பின்னர் Unsold ப்ளேயர் ஆனார்.

    இதனையடுத்து கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் கேதர் ஜாதவ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதர் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது. அவருக்கு பாஜக உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    ×