என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆர்சிபி அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார்.
    • பஞ்சாப் அணியில் இங்கிலிஷ் இடம் பிடித்திருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் போர் ஏற்படும் சூழல் உருவானது.

    இதன்காரணமாக ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதனால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு விளையாட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 11ஆம் தேதி தொடக்கம்) விளையாடுவதற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு அணி வீரர்களும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    மார்கிராம், ரபாடா, ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் விளையாடவில்லை. அதேவேளையில் பிளேஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறிய ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் மற்றும் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலிஷ் ஆகியோர் இறுதிப் போட்டி வரை விளையாடினர்.

    இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் புறப்பட்டார். ஹெசில்வுட் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் புறப்பட்ட்டார். இந்த நிலையில் இருவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளனர்.

    • முகமது ரிஸ்வான் ஒயிட்பால் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.
    • ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார்.

    பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணி கேப்டனாக ரிஸ்வான் இருந்து வருகிறார். பாகிஸ்தான் ஜிம்பாப்வே சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சல்மான் ஆகா கேப்டன்ஷிப் செய்யும் விதம் புதிய பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

    இதனால் சல்மான் ஆகா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவிலான கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான அணி நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரை 3-0 எனத் தோற்றிருந்தது. அவரது கேப்டன்ஷிப் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்துடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 12 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என இழந்திருந்தது. இதனால் இருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

    இந்த நிலையில்தான் சல்மான் ஆகாவின் கேப்டன்ஷிப், அவரின் தெளிவு, தந்திரோபாய திறமை ஆகியவை தேர்வாளர்களை ஈர்த்துள்ளது.

    • ஐபிஎல் தொடரில் 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • ஒருநாள் போட்டியில் விளையாடும் அவர், டி20-யிலும் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கேப்டன் பதவியுடன், 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற வைத்தார். தற்போது பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையத்துவம் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. இந்திய சீனியர் அணியில் தற்போது 50 ஓவர் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். ரோகித் சர்மா, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், வரும் காலங்களில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.

    ரோகித் சர்மா தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறது. இவருக்கு பின்னால் யார்? கேப்டன் என்ற கேள்வி எழவில்லை.

    சுப்மன் கில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என பிசிசிஐ எடுக்கும் முடிவில் செல்வாக்குமிக்க நபர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அந்த நபர் "தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். அவரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வைக்காமல் இருக்க முடியாது. கூடுதலாக, தற்போது அதிகாரப்பூர்வமாக ஒயிட் பால் அணி கேப்டனுக்கான போட்டியில் இணைந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 11ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுன்ஸ் வீசக் கூடியவர்கள். மேலும். கூக்கப்புரா பந்துகளை பயன்படுத்துபவர்கள். ஆனால் இங்கிலாந்து ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படும்.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விதியாசமான சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாதன் லயன் கூறியதாவது:-

    வெளிநாட்டு (இங்கிலாந்து) சீதோஷ்ண நிலை, டியூக்ஸ் பந்து உடன் வித்தியாசமாக சவாலாக இருக்கப் போகிறது. இரண்டு சிறந்த பந்து வீச்சு குழுவுடன் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சிறந்த சவாலாக இருக்கும்.

    இவ்வாறு நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.

    அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
    • கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.

    இந்நிலையில், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோன்று கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
    • ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார். ஜேமி ஸ்மித் 38 ரன் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் டாசன் 4 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், ஜேக்கப் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    நார்த்தம்ப்டன்:

    இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

    கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

    • டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது.

    கோவை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்ல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மோஹித் ஹரிஹரன் அதிரடியாக ஆடி 22 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கேப்டன் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 48 பந்தில் 77 ரன்னும், விஜய் சங்கர் 23 பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • துஷார் ராஹேஜா 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபரஜித் பந்து வீச்சை தெர்வு செய்தார்.

    அதன்படி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அமித் சாத்விக், துஷார் ராஹேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அமித் சாத்விக் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    ஆனால் துஷார் ராஹேஜா சிறப்பாக விளையாடினார். 43 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருக்குத் துணையாக பிரதோஷ் ரஞ்சன் பாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 16 ஓவரில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    17ஆவது ஓவரில் 10 ரன்களும், 18ஆவது ஓவரில் 8 ரன்களும் சேர்த்தது திருப்பூர் தமிழன்ஸ். 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

    19ஆவது ஓவரில் 8 ரன்களும், கடைசி ஓவரில் 5 ரன்களும் சேர்த்தது. இதனால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் அபிஷேக் தன்வர், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • டி.என்.பி.எல். 2025 சீசன் நேற்று தொடங்கியது.
    • முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 சீசன் நேற்று தொடங்கியது. இன்று கோவையில் நடைபெறும் 2ஆவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் பாபா அபரஜித் டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தியது.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி:-

    அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், கே. ராஜ்குமார், சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், பிரபஞ்சன், எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:-

    என். ஜெகதீசன், பாபா அபரஜித், அபிஷேக் தன்வர், எஸ் தினேஷ் ராஜ், ஆஷிக் ரஹ்மான், மோஹித் ஹரிகரன், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், பிரேம் குமார், எம். சிலம்பரசன், லோகேஷ் ராஜ்.

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
    • இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது. முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:

    டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், லெசெகோ செனோக்வானே, பிரெனலன் சுப்ராயென், கைல் வெர்ரெய்ன், கோடி யூசுப்.

    ×