என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேசில்வுட்"

    • வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 141 ரன்களுக்கு சுருண்டது.

    பார்படாஸ்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    இதன்படி, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவில் ஹெட் 59 ரன்னும், கவாஜா 47 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 48 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி 65 ரன்னும், வெப்ஸ்டர் 63 ரன்னும், டிராவிஸ் ஹெட் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

    ஆஸ்திரேலியாவின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஷமார் ஜோசப் 44 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 38 ரன்னும் எடுத்தனர். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி

    56 ரன்கள் சேர்த்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 159 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • ஆர்சிபி அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார்.
    • பஞ்சாப் அணியில் இங்கிலிஷ் இடம் பிடித்திருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் போர் ஏற்படும் சூழல் உருவானது.

    இதன்காரணமாக ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதனால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு விளையாட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 11ஆம் தேதி தொடக்கம்) விளையாடுவதற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு அணி வீரர்களும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    மார்கிராம், ரபாடா, ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் விளையாடவில்லை. அதேவேளையில் பிளேஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறிய ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் மற்றும் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலிஷ் ஆகியோர் இறுதிப் போட்டி வரை விளையாடினர்.

    இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் புறப்பட்டார். ஹெசில்வுட் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் புறப்பட்ட்டார். இந்த நிலையில் இருவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடர் உல்க டெஸ்ட் சான்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளும் மிக கடுமையாக போராடுவர்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். அதே போல் காயம் காரணமாக விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம் பெறவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் வருமாறு:

    பேட் கம்ம்னிஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், மைகேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

    • நியூசிலாந்து அணியில் டாம் லாதம் அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்தார்.
    • ஹேசில்வுட் 5 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்தின் பேட்டிங்கை சீர்குலைத்தார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டாம் லாதம்- வில் யங் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. வில் யங் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    வில் யங் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் லாதம் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் இந்த முறையும் 17 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் சீரான இடைவெளியில் நியூசிலாந்து பேட்ஸ்கள் வெளியே 162 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணியால் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    கேன் வில்லியம்சன்

    ரச்சின் ரவீந்திரா (4), டேரில் மிட்செல் (4), கிளென் பிலிப்ஸ் (2) ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    டாம் பிளெண்டல் (22), மேட் ஹென்றி (29), சவுத்தி (26) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க் 3 விக்கெட்டும் கம்மின்ஸ் மற்றும் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 32 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்தது. ஸ்மித் 11 ரன்னிலும், கவாஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது

    ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் டுவார்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரகளில் தொடங்க உள்ள நிலையில் இவர்கள் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பிப்ரவரி 22-ம் தேதி லாகூரில் உள்ள கடாஃபி மைானத்தில் நடைபெற இருக்கிறது. 

    ×